டெல்லி: கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி அங்கு போட்டியிடுவது குறித்து யோசிக்க வேண்டும் என  மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மூத்த உறுப்பினர் பிருந்தா காரத் தெரிவித்து உள்ளார்.

இண்டியா கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்டு கட்சிகளே, கேரள மாநிலத்தில், காங்கிரஸ் கட்சிக்கு எதிராக உள்ளது. கேரளத்தில் ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணி (எல்டிஎஃப்) கூட்டணி சாா்பில் மக்களவைத் தோ்தலில் 4 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளா்களை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளா் பினோய் விஸ்வம்அறிவித்தார்.

அதன்படி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், அக்கட்சியின் பொதுச் செயலருமான டி.ராஜாவின் மனைவியுமான ஆனி ராஜா,  ராகுல்காந்தி யின் தொகுதியான வயநாடு தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். இது காங்கிரஸ் தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வயநாடு தொகுதி,  காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல் காந்தியின் தொகுதி என்பதாலும்,  அவருக்கு எதிராக அங்கு கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் களமிறக்கப்பட்டு உள்ளதாலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த மார்ச்சிஸ்டு   கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பிருந்தா காரத்,  இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளரான ஆனி ராஜாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்.  ஆனி ராஜா இடதுசாரி ஜனநாயக முன்னணியின் வேட்பாளராக வயநாடு தொகுதிக்கு அறிவிக்கப் பட்டு உள்ளார். இதனால், பாஜகவுக்கு எதிராக போராடுவதாக கூறும், காங்கிரஸும், ராகுல் காந்தியும் அங்கு போட்டியிடுவது குறித்து  யோசிக்க வேண்டும்.

கேரளத்தில் இடதுசாரிகளுக்கு எதிராக போட்டியிடுவதன் மூலம் என்ன சொல்ல நினைக்கிறீர்கள்? என கேள்வி எழுப்பியவர், அதனால், அவர்கள் போட்டியிடும் தொகுதி குறித்து யோசிக்க வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.

. “மகிளா அந்தோலனில்’ முக்கியப் பங்கு வகித்த தோழர் அன்னி ராஜாவை வயநாடு தொகுதிக்கு CPI தனது வேட்பாளராக அறிவித்துள்ளது. இனி அவர் முழு LDF தரப்பிலிருந்தும் வேட்பாளராக வருவார்.  எனவே காங்கிரஸ் கட்  தங்கள் இருக்கையை மீண்டும் ஒருமுறை யோசிக்க வேண்டும்” என்று சிபிஎம் தலைவர் பிருந்தா காரத் கூறினார்.

முன்னதாக, கேரளாவில் இடது ஜனநாயக முன்னணிக்கும் (எல்.டி.எஃப்) ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கும் (யு.டி.எப்.) இடையே போட்டி நிலவுவதாகக் கூறிய அன்னி ராஜா, அதே நிலைதான் உள்ளது என்றும் எதுவும் மாறவில்லை என்றும் கூறினார்.

‘இந்தியா’ கூட்டணியில் அங்கம் வகித்தாலும், கேரளத்தில் காங்கிரஸும், இடதுசாரிகளும் தனித்தனியே போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.