டெல்லி: உலக சாம்பியன் சீன வீரரை வீழ்த்தியதுடன், உலக செஸ் சாம்பியரான இருந்து வந்த தமிழக வீரர் விஸ்வநாதன் ஆனந்தை பின்னுக்கு தள்ளி மற்றொரு தமிழக  இளம் வீரரான  பிரக்ஞானந்தா முதலிடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார்.

நெதர்லாந்தில் நடைபெற்று வரும் டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ் தொடரின்  நான்காவது சுற்றில் உலக சாம்பியன் வீரரான சீனாவின் டிங் லிரன் என்பவரை பிரக்ஞானந்தா  எதிர்கொண்டார் . இந்த போட்டியில் தொடர்ந்து முன்னிலை பெற்று வந்து பிரக்ஞானந்தா, டிங் லிரனை வீழ்த்தி வெற்றி பெற்றார்.

இதன் காரணமாக, இந்தியாவின் நம்பர் 1 செஸ் வீரராக இருந்து வரும் விஸ்வநாதன் ஆனந்தை முந்தி இளம் செஸ் வீரரான பிரக்ஞானந்தா. முதல் இடத்தை பிடித்துள்ளார்

இந்த புள்ளிகளில்  இதுவரை, இந்தியாவின் டாப் வீரராக 20 ஆண்டுகளுக்கு மேலாக இருந்து வந்த விஸ்வநாதன் ஆனந்த் தற்போது 2748 புள்ளிகளை வைத்துள்ளார். இவர்தான் இந்திய வீரர்களில் 2000, 2007, 2008, 2010, 2012 ஆகிய ஆண்டுகளில் உலக சாம்பியன் பட்டத்தை வென்ற சாதனையாளர் மற்றும்  அதிக முறை உலக சாம்பியன்ஷிப் வென்றவர் என்ற  பெருமைக்கும் உரியவர். இந்த நிலையில், தற்போதைய இளம் வீரான பிரக்ஞானந்தா,  இந்தியாவின் டாப் வீரராக தமிழ்நாட்டைச் சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்தை  வீழ்த்தி மற்றொரு தமிழ்நாட்டை சேர்ந்த வீரரான பிரக்ஞானந்தா முன்னேறியுள்ளார்.

நெதர்லாந்தில் நடைபெற்ற போட்டியில், சீன வீரர் லிரனுக்கு எதிராக  கருப்பு காய்களுடன் விளையாடினார் பிரக்ஞானந்தா. தனது 62வது நகர்த்திலின் அவர் டிங் லிரினை வீழ்த்தி, நடப்பு உலக சாம்பியனை வீழ்த்திய இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார்.

இந்த தொடரில் முதல் மூன்று சுற்றுகளில் விளையாடிய பிரக்ஞானந்தா டிராவில் முடித்தார். நான்காவது சுற்று கிளாச்சிக்கல் செஸ் போட்டியாக நடைபெற்றன. இதில் பிரக்ஞனந்தா உலக சாம்பியனை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார். அத்துடன் கிளாசிக்கல் செஸ் போட்டியில் போட்டியில் உலக் சாம்பியனை வீழ்த்திய இரண்டாவது இந்தியர் எனவும் சாதனை புரிந்துள்ளார். முன்னதாக விஸ்வநாதன் ஆனந்த் தான் கிளாசிக்கல் செஸ் போட்டியில் உலக சாம்பியனை வீழ்த்தியிருந்தார்.

பிரக்ஞானந்தா பெற்றிருக்கும் வெற்றியின் மூலம் இந்தியாவில் நம்பர் 1 வீரராக இருந்து வந்த கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்தை பின்னுக்கு தள்ளியுள்ளார். உலக சாம்பியனை வீழ்த்திய 18 வயதாகும் பிர்க்ஞானந்தா சர்வதேச செஸ் கூட்டமைப்பான ஃபிடே ரேட்டிங்கில் 2 இடங்கள் முன்னேறி 2748.3 புள்ளிகளை பெற்றுள்ளார்.