திட்டக்குடி: சிஎஸ்கே மற்றும் தோனியின் தீவிர ரசிகர் கோபிகிருஷ்ணன் கடன் பிரச்சினை காரணமாக ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படகிறது.

கடலூர் மாட்டம் திட்டக்குடி அடுத்த அரங்கூர் பகுதியை சேர்ந்தவர் கோபிகிருஷ்ணன். வயது  34.  இவருக்கு அன்பரசி என்ற மனைவியும் கிஷோர், சக்திவேல் என்ற ஆண் குழந்தைகளும் உள்ளது. 2வது குழந்தை  பிறந்து 10 நாட்களே ஆன நிலையில், அவர் தற்கொலை செய்துகொண்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தை உள்ளது.

கோபி கிருஷ்ணன் தீவிர தோனி மற்றும்  சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகராக இருந்து வந்தவர். சென்னையில் தோனி கலந்துகொள்ளும் அனைத்து போட்டிகளையும் தவறாமல் பார்த்து ரசித்தவர். தோனி மீதான ஈர்ப்பார் தனது உடைகள்ளும் மட்டுமின்றி தனது வீட்டையே முற்றிலும் மஞ்சள் நிறத்தில் மாற்றியதுடன், சுவர்களில் தோனி படத்தை வரைந்துவைத்து பிரபலமடைந்தார்.

இந்த நிலையில், கோபிகிருஷ்ணன் இன்று அதிகாலையில் வீட்டில் தனது மனைவி சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து அவரது உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பிய நிலையில், அவரது தற்கொலை குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

முற்கட்ட விசாரணையில், பல்வேறு இடங்களில் கடன்களை வாங்கியுள்ள கோபி கிருஷ்ணனுடன் நேற்றிரவு அந்த பகுதியைச் சேர்ந்த சிலர் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் ஏற்பட்ட மோதல், பின்னர் கைகலப்பாகி மாறி, கோபி கிருஷ்ணனை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த   கோபிகிருஷ்ணன் வீட்டில்  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக  விசாரணையில் தெரிய வந்துள்ளது என காவல்துறையினர் தெரிவித்து உள்ளனர். மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.