துணிவு திரைப்படம் ஜனவரி 11 ம் தேதி வெளியாகும் என்று நேற்று அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியானது.

பொங்கல் பண்டிகைக்கு இன்னும் ஒரு வாரமே இருப்பதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்து வந்தது.

இதனை அடுத்து விஜய் நடித்த வாரிசு படமும் ஜனவரி 11 ம் தேதி வெளியாகும் என இன்று நள்ளிரவு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் இந்த ஆண்டு தியேட்டரில் பொங்கலை துவங்க தயாராகியுள்ளனர்.