ம்பால்

ணிப்பூரில் இனக் கலவரம் வெடித்துள்ளதால்  அந்தந்த இனத்தவர் தங்கள் வீட்டு வாசலில்  இனப்பெயரை வைத்துள்ளனர்.

மணிப்பூர் மாநிலத்தில் மைதி  மற்றும் குகி இனத்தவர் அதிக அளவில் உள்ளனர்.  இவர்களில் மைதி இனத்தவரை பழங்குடியினராக அங்கீகரிக்கக் கோரிக்கை எழுந்தது.   இதை வலியுறுத்திச் சென்ற வாரம் நடந்த ஊர்வலத்தில் குகி இனத்தவருக்கும் மைதி இனத்தவருக்கும் இடையில் கலவரம் வெடித்து நாடெங்கும் வன்முறை பரவி உள்ளது.

மாநிலம் எங்கும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டும் வன்முறைச் சம்பவங்கள் தொடர்கின்றன.  தற்போது வன்முறைக்குப் பயந்து அந்தந்த இனத்தவர் தங்கள் இனத்தவர்களே தங்களைத் தாக்காமலிருக்க வீட்டு வாசலில் இனப்பெயரை எழுதி வைத்துள்ளனர்.   அவற்றில் சில வீடுகளின் புகைப்படங்கள் இதோ