வார ராசிபலன்: 15.11.2019 முதல்  21.11.2019 வரை! வேதா கோபாலன்

Must read

மேஷம்    

குடும்பம், காதல், உத்தியோகம் போன்ற எல்லா விஷயங்களில் மனசில் நிறைவு இருக்கும். குடும்பம் மற்றும் காதல் தொடர்பான விஷயங்களில் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். பணம் நாலாபுறமிருந்தும் வந்து சேரும். அதிருஷ்டத்தில் சின்னச் சின்ன தடைக்கற்கள் இருந்தாலும் அதிருஷ்டம் அடித்து வைரக்கற் களாக வாழ்வினை மின்ன வைக்கும். சகோதர சகோதரிகளின் வாழ்வில் திடீர்த்தென்றல்வீசி அவர்களை கோபுர உச்சிக்குக் கொண்டு செல்லும். ஆன்மிக ஈடுபாடு இன்கிரீஸ் ஆகும். கோயில்களுக்குப் போவீங்க. கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் அமையும். அந்த வாய்ப்புகள் எதிர்கால நன்மைக்கு வித்திடும்.  வாழ்த்துகள். சாப்பாட்டு விஷயத்திலும் வாகனங்களைக் கையாள்வதிலும் ஜாக்கிரதையா இருந்தால் ஆரோக்யம் சூப்பரா இருக்கும். வீடு /ஃப்ளாட் வாங்குவீங்க.

ரிஷபம்

உங்களை நேசிப்பவர்கள் மற்றும் குடும்பத்தினர் உங்களுடைய எண்ணங்களை எதிர்மறையாக எடுத்துக் கொள்ளும்படி மனசு தூண்டக்கூடும். ஜாக்கிரதை. எந்தவித எதிர்மறை சிந்தனைக்கும் இடம் கொடுக்கவே செய்யாதீங்கப்பா. வெற்றியை சாதிக்க ஒரே வழிதாங்க இருக்கு. அது என்ன தெரியுமா?  எல்லா விஷயங் களிலுமே சற்று பொறுமையாகக் காத்திருப்பதுதான், நீங்க அடையப்போகும் வெற்றி வாய்ப்புக்கள் சற்றே தாமதம் அடைந்தாலும் அந்த வெற்றிகளை நீங்கள் அடைவது உறுதிதான். அநாவசியத்துக்கு டென்ஷன் கின்ஷன் ஆவாதீங்க. போட்டிகளையும், பொறாமைகளையும்  சமாளிக்க வேண்டியதிருக்கும். நல்ல வேளையா நீங்க இப்போதைக்கு யார் வம்புக்கும் போக மாட்டீங்க. பேச்சிலும் மென்மையும் பணிவும் இருக்கும்.  தப்பிச்சீங்கப்பா.

மிதுனம்

மாணவர்கள்/ மாணவியர்  படிப்பில் முன்னணி நிலையை எட்டக்கூடிய சூழ்நிலை உருவாகுமுங்க. யார் கண்டது.. மேடையில் ஏறிப் பாராட்டுடன் பரிசும் பெறுவீங்க. படிப்பில் உங்கள் ஈடுபாடு அதிகரிக்கும். இத்தனை காலமாக இருந்து வந்த கூடா நட்பையெல்லாம் தூக்கிக் கடாசிட்டு நல்ல நண்பர்களைத் தேர்ந்தெடுத்தாலதான் இந்த முன்னேற்றம். புரிஞ்சதா?  பெண்களுக்கு குடும்பத்தில் நிம்மதியான சூழ்நிலை தோன்றும். கணவன் – மனைவி இடையே இத்தனை காலம் இருந்து வந்த டிஷ்யூம் டிஷ்யூ மெல்லாம் மறைந்து, அன்யோன்யமும் நட்புணர்வும் ஏற்பட்டுக் கலகலப்பு உருவாகும். மின் சாதனங்களில் பணி புரிவோர் கொஞ்சம்  கேர்ஃபுவல்லாக செயல்படுவது அவசியம். சேமிக்க ஆரம்பிச்சுட்டீங்க. சபாஷ்.

கடகம்

உடன் பிறப்புகள் உதவிக்கரம் நீட்டுவாங்க. உதறிடாதீங்க. பயன்படுத்திக்குங்க.  கூடுதல் வருமானங்கள் உண்டு. ஆனா செலவுகளும் உண்டு. கேர்ஃபுல் இருங்க. உங்க குடும்பத்தில் யாராவது கல்யாணத்துக்குக் காத்திருந்தால், விட்டுப்போன வரன்கள் மீண்டும் வருவாங்க. அனேகமாய் அந்த இடம்தான் அமையும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிக்கு நண்பர்கள் உறுதுணை புரிவாங்க. வீடு ..நிலம் போன்ற சொத்துகளால் லாபம் உண்டு. ஒரு வேளை நீங்க அவற்றை விற்பதானாலும் நல்ல விலைக்குப் போகும். வீடு அல்லது ஃப்ளாட் கட்டுவதற்காக நீங்க லோன் போட்டிருந்தீங்கன்னா அது டக்கென்று கைக்கு வரும். ஏற்கனவே பல காலமாக நீங்க கொடுத்த/ வாங்கிய கடன்கள் வேகமாய்த் தீர்ந்து நிம்மதிப்பெருமூச்சைப் பரிசாய்த் தரும்.

சிம்மம்

அலுவலகம் தொடர்பான விஷயங்களில் மெதுவான முன்னேற்றம்தான் ஏற்படும். எனினும் உயர் அதிகாரி களின் ஆதரவு இருப்பதால் ஒரு சிலருக்கு வாரத்தின் பிற்பகுதியில் நல்லவிதமான  சலுகைகள் கிடைக்குமுங்க.  தொழில் செய்பவர்களுக்கு, வேலைப்பளு கூடுதலாக இருக்கும். ஆனால் அதற்கேற்ற வருமானம் வந்துவிடுவதால் உங்களுக்கு அது பெரிய பளுமாதிரித் தெரியாது. குழந்தைங்க வாழ்க்கையில் நீங்க விரும்பிய நன்மைகள் உண்டாகும். அவங்க வருமானமும் அதிகரிக்கும். மனசில் தெளிவு ஏற்படும். கோயில்களுக்குப் போவீங்க. நன்மை கூடுதலாகும். அலுவலகத்தில் எதிர்பாராத முன்னேற்றம் ஏற்படுவதால் சம்பளம் உயரும். பதவியும் உயரும். அல்லது உங்களுக்கு அளிக்கப்பட்ட பொறுப்புகளை நீங்க சரிவரச் செய்வதால் மேலதிகாரி பாராட்டி மனசைக் குளிர்விப்பார்.

கன்னி

வாகனப் பராமரிப்பில் கொஞ்சம் அதிகக் கவனம் செலுத்துங்கப்பா. திட்டமிட்ட காரியங்களில் திடீர் மாற்றம் ஏற்படும். எனினும் தயங்காதீங்க. எல்லாம் நல்லபடியாக முடியும். நீங்க ஒண்ணு நினைச்சால் தெய்வம் ஒண்ணு நினைக்கும். எது எப்படியானாலும் பலகாலம் காத்திருந்த தெய்வப் பிரார்த்தனை களையெல்லாம் ஒரு வழியா  நிறைவேற்றுவீங்க. உத்தியோக நலன்கருதி எடுத்த புதுமுயற்சி வெற்றி தரும். எனினும் அகலக்கால் வைக்க வேணாங்க. குறிப்பா வெளியூர் அல்லது வெளிநாட்டில் தங்கி வேலை பார்க்கறவங்களும், படிப்பைத் தொடர்ந்துக்கிட்டிருக்கறவங்களும் இரட்டிப்பு கேர்ஃபுல்லா இருந்துட்டா பிரச்சினை வராதில்ல. . வெளிநாட்டில் உள்ள மகன்/ மகள் அல்லது நெருங்கிய உறவினரிடமிருந்து ஒரு நல்ல செய்தி வந்து சேரலாம்.

துலாம்

புதிய நண்பர்களால் நன்மைகள்  ஏற்பட வாய்ப்புண்டு.  முன்பு கசப்புடன் விலகிய நண்பர்கள் இப்போது மெல்ல வந்து ஒட்டுவார்கள். ஏதேனும் காரணத்துக்காக நீங்க ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தால் கவலைப்படவே வேண்டாம். நல்லபடியா முழு ஆரோக்யத்துடன் மீளுவீங்க. அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்கள் , எதிர்பார்த்தபடியே இடமாற்றம், பதவி உயர்வுகளைப் பெறுவீங்க. நினைச்ச அளவு சம்பளமும் ஒரு வழியா உயரும். ஆனால் கடுமையான எதிர்ப்புகளைக் கடந்த பின்னரே அதைப் பெற முடியும். ஒரு முதலாளி உங்களை ஆதரிச்சால் மற்றொருவர் அதை அரைமனசுடன்தான் ஒப்புத்துக்குவார். அதனால் என்னங்க? கடைசியில் ரிசல்ட் அருமையா இருக்கும். உங்க அப்பாவின் ஆரோக்யம் நல்லபடியா மீளும்.

விருச்சிகம்

படித்துக்கொண்டிருக்கும் மகனுக்கு/ மகளுக்கு படிப்பில் ஆர்வம் மிகுதியாவதைக் கண்டு டாடி மம்மி சந்தோஷமடைவாங்க. பெண்களின் சாமர்த்தியம் குடும்ப நிர்வாகத்தில் பல வகையிலும் உபயோகப் படுவதைக் கண்டு பலரும் பாராட்டுவாங்க. கணவன் – மனைவி இடையே கடந்த சில மாசங்களா இருந்து வந்த சச்சரவுகள் காணாமல் போய்,  சுமுகமான போக்கு நிலவி வரும். அரசாங்கம் மூலமாக நிறைய நன்மைகள் கிடைக்க வாய்ப்பு ஏற்படும். பெண்கள் பொன் நகைகள் வாங்கச் சந்தர்ப்பம் உருவாகும். புதிய மனிதர்கள் சிலரின் நட்பு கிடைக்கும். சற்றே சீர்தூக்கி அதற்கப்புறம் அதை ஏற்பது நல்லதுங்க. ஆரோக்யம் சூப்பராயிருக்கும். அது பற்றி இத்தனை காலம் இருந்து வந்த கவலைகள் எல்லாம் காணாமல் போகும்.

சந்திராஷ்டமம் : நவம்பர் 15 முதல் நவம்பர் 17 வரை

தனுசு

அடிப்படை வசதிகளை அதிகமாக்கிக்கொள்வதற்கான முயற்சிகளை எடுப்பீங்க.  ஆரோக்கியம் பற்றிய டென்ஷன்களும் கவலைங்களும் அகலும். பூர்வீக சொத்துக் களிலிருந்த பிரச்சினைகள் தீர புது வழியைத் தேர்ந்தெடுப்பீர்கள். அல்லது உங்க வக்கீல் நல்ல முறையில் வழி காட்டுவார். எதிலும் தடைகள் இருக்கும்தான். ஆனாலும் அதையெல்லாம் தூக்கிக் கடாசிட்டு முன்னேற இறைவன் வலு கொடுப்பான். பல காலம் பெண்டிங்கில் போட்டிருந்த அலுவலகப் பணி திடீர் வேகம் புடிச்சு துரிதமாக நடை பெறும். நீங்கள் எடுக்கும் காரியங்கள் எல்லாவற்றிலுமே நல்ல  முன்னேற்றமான போக்குதாங்க கண்ணுக்குத் தெரியும். எதிர்பாராத பண வரவால், கடன் சுமை வெகுவாக குறையப்போகுது பார்த்துக்கிட்டே இருங்க.

சந்திராஷ்டமம் : நவம்பர் 17 முதல் நவம்பர் 19 வரை

மகரம்

உத்தியோகத்தில் உள்ளவங்களுக்கு இடமாற்றம்  பதவி உயர்வு மாதிரியான, அலுவலகம் மற்றும் உத்யோகம் சம்பந்தப்பட்ட  பல நல்ல முன்னேற்றங்கள் ஏற்படுவதால்  மகிழ்வீர்கள். வருமானமும் மகிழ்ச்சி தரும் வகையில் அமைந்துவிடு என்பதால் வீடு மனை போன்றவை வாங்கும் யோசனை வரும். இத்தனை காலம் இருந்து வந்த செலவுகள் கட்டுப்படும். தொழில் செய்பவர்கள், அரசு வழியிலான சில நன்மைகளைப் பெற்று, அதன்மூலம் தங்கள் துறையில் முன்னேற்றம் காண்பீர்கள் பாருங்களேன்.  கூட்டுத் தொழில் செய்பவா்களுக்கு வியாபாரம் லாபகரமாகவே நடைபெறும். பார்ட்னரும் நல்லபடியா அனுசரணையாக நடந்துக்குவாங்க. நிச்சயமா ஏமாற்ற  மாட்டாங்க. டோன்ட் ஒர்ரி. கலைஞர்களுக்கு சில புதிய வாய்ப்புகள் கிடைத்து, வாழ்க்கைத் தரம் உயர வழி ஏற்படுத்திக் கொடுக்கும்.

சந்திராஷ்டமம் : நவம்பர் 19 முதல் நவம்பர் 21 வரை

கும்பம்

தெய்வீக நாட்டம் அதிகரிக்குமுங்க. சொத்துக்களால் ஏற்பட்ட பிரச்சினை ஒரு வழியாக முடிவுக்கு வந்து மனசில் நிம்மதி ஏற்படுத்தும். சொந்தங்களின் ஒத்துழைப்பு கொஞ்சம் குறைவாகவே இருக்கலாம். அதை விட்டுத் தள்ளுங்க.  உங்களுக்கு முக்கியமான  சகோதர சகோதரிங்களின் எதிர்ப்பு காணாமல் போகுமுங்க. அலுவலகம் தொடர்பான விஷயங்களில் நன்மையை உடனடியாக எதிர்பார்க்கலாம். நீங்க கனவிலும் எதிர்பாராத முன்னேற்றங்கள் வாழ்வில் வரும். குறிப்பா அலுவலகத்தில் வரும். என்றைக்கோ செய்த முதலீடுகள் இப்போ உங்களுக்கு விழி விரிய லாபம் தரும். எதிர்பாராமல் வரும் பிரச்சினைகளை சுலபமாக சமாளிச்சு ஜெயிச்சு நிமிர்ந்துடுவீங்க.  உறவினர் வகையில் சுபநிகழ்ச்சிகள் தொடர்பான பேச்சு வார்த்தை நடக்கும். அதில் உங்களுக்கு நல்ல பெயர் கிடைக்கும்.

மீனம்

பெண்களுக்கு குடும்பத்தில் மட்டுல்லீங்க..  அக்கம்பக்கத்திலும் நல்ல பெயர் ஏற்படும். எல்லாமே இனிதாக நடந்து  சந்தோஷத்தைத் தரும். குடும்பத்தில் குதூகலமான போக்கு தென்படும். குறிப்பா அம்மாவுக்கும் அப்பாவுக்கும உங்களால சந்தோஷம் ஏற்படும். உங்க குடும்பத்தினரை அழைச்சுக்கிட்டுப்  பயணம் போவீங்க. உங்க வீட்டில் சுப காரியம் நடைபெறலாம். சிலருக்கு காணாமல் போன பொருள் ஒன்று, (குறிப்பாய்த் தங்கம் வெள்ளி போன்ற விலை உயர்ந்த பொருள்) கைக்கு வந்து சேரும். குடும்பத்தில் வயது முதிர்ந்த ஒருவருக்கு மருத்துவச் செலவு செய்ய நேரிடும். அதற்காகப் பணம் சற்று செலவானாலும்கூ அவர் நல்லபடியாக எழுந்து நடமாடுவார். சிலர் குடியிருக்கும் வீட்டை மாற்றுவீங்க. பெண்களுக்கு உடை- நகை சேர்க்கை உண்டு.

More articles

Latest article