மேஷம்

களைப்பை அகற்றி உழைப்பில் கவனம் செலுத்துவீங்க. நண்பர்களின் ஆலோசனை தக்கவிதத்தில் கைகொடுக்கும். குடும்பத்திற்குத் தேவையான பொருட்களை வாங்கும் ஆர்வம் உண்டாகும். கணவரும் குழந்தைங்களும் நிம்மதியா இருப்பாங்க. அது உங்களுக்கு சந்தோஷம் குடுக்கும். வெளிநாட்டில் உள்ள உறவினர்களிடமிருந்து நல்ல செய்தி உண்டு. நண்பர்கள் எப்போதும்போல இந்த வாரமும் உதவியா இருப்பாங்க. வேலைகளை உடனுக்குடன் முடிச்சு நிம்மதி காண்பீங்க. பல காலம் தொடர்பு விட்டுப்போயிருந்த நண்பர்களும், உறவினர்களும் வலிய வந்து பேசுவாங்க. உங்களைப் பகைச்சுக்கிட்டிருந்தவங்க வெள்ளைக்கொடி காட்டுவதோடு, உங்களைப்போல உண்டான்னு கையை நீட்டிக்கிட்டு வருவாங்க. கைகூப்பி சேர்த்துக்குங்க. குடும்பத்துல சந்தோஷமும், ஒற்றுமையும் உற்சாகமும் புரளும். டாட்டா போவீங்க.

ரிஷபம்

பக்குவமாகப் பேசிக் காரியங்களை சாதித்துக்கொள்ள வேண்டிய வாரம். இடமாற்றம் இனிமை தரும். மனதிற்கு சந்தோஷத்தைக் கொடுக்கும் தகவல் இந்த வாரம் வரலாம். திடடமிட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். பணத்தட்டுப்பாடு அகலும். நேர்முகத் தேர்வில் வேலை கிடைக்கும். நண்பர்கள் நம்பிக்கைக்குரிய விதம் நடந்துகொள்வர். இதுவரை மனம் மாறாமல் இருந்த மேலதிகாரிங்க, இப்பொழுது உங்கள் குரலுக்கு செவிசாய்ப்பாங்க. பிள்ளைகள் வழியில் கொஞ்சம் செலவுகள் ஏற்படலாம். பிறருக்கு ஜாமீன் கையெழுத்துப் போட்டு வாங்கிக்கொடுத்த தொகையால் லைட்டா பிரச்சினைகள் வரலாம். நீங்க எப்பவுமே உங்க கை ஓங்கணும்னு நினைச்சுக்கிட்டுக் குரலை உயர்த்தினா அது நியாயமே இல்லீங்க. அனுசரிச்சுப் போங்க. வாழ்க்கை இனிமையாகும். கவரும் தன்மை அதிகரிக்கும். சுப செலவுகள் கூடுதலாகும். சோம்பல் வராம பார்த்துக்குங்க.

மிதுனம்

யோகமான வாரம் இதுங்க. யோசிக்காம செய்யற  காரியங்கள் கூட வெற்றி பெறும். தாய்வழி உறவினர்கள் மூலம் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் டாட்டா காண்பிச்சு ஓடிடும். நூதனப் பொருட்களின் சேர்க்கை உண்டுங்க. தந்தை வழியில் உள்ள ரிலேடிவ்ஸைக் கொஞ்சம் அனுசரித்து செல்லுங்கள். சொத்துக்களில் முறையான பங்கீடு கிடைக்கக் கொஞ்சம் ஃபைட் செய்ய வேண்டியிருக்கும். . அதேநேரம் குடும்பத்துக்குள்ள இருந்துக்கிட்டிருந்த  பிரச்சினைங்க நல்ல முடிவிற்கு வரும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீங்க. சுப காரியங்கள் பல, இல்லத்தில் நடைபெறும். மம்மியின்  உடல்நலம் சீராகும். பகையை வெல்வீங்க. தொழில் புரிபவர்களுக்கு, பணியாளர் தொல்லை அகலும்.  திடீர் வரவு சந்தோஷம் தரும். அப்பாவோட சண்டை போடாம இருங்க. இன்னும் கேட்டா, அவரை வணங்கினால் இன்னும் நன்மை கூடும்.

கடகம்

திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்டபடியே நடைபெறும். தெய்வீக சிந்தனை மேலோங்கும். பிள்ளைகள் வழியில் ஹாப்பி செய்தி வீடு வந்து சேரும். உடன்பிறப்புகள் உங்கள் நலனில் அக்கறை காட்டுவாங்க.  குடும்ப ஒற்றுமை பலப்படும். பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். மம்மி டாடியின் ஆதரவு நல்ல விதத்தில் கிடைக்கும். புதிய வேலையில் ஆர்வம் காட்டுவீங்க. ஆபரணச் சேர்க்கை உண்டு. மாணவர்கள் நிறைவைக் காண்பீங்க. எதிர்பார்த்த மற்றும் எதிர்பாராத மாற்றங்கள் வந்துசேரும். தொழில் வெற்றியாகும். ஆரோக்கிய விஷயங்களில் அலட்சியம் வேண்டாம். ஆமாம். சொல்லிப்புட்டேன். நீங்க எதிர்பார்த்த அளவுக்கு நிலைமை சீரடைய இன்னும் சில வாரங்கள் ஆகும். டோன்ட் ஒர்ரி. அப்புறம் இரட்டிப்பு நன்மைகள்தான். ஆபீசில் ஒரு மேலதிகாரி உங்க மேல அன்பு செலுத்தி, முக்கியத்துவம் கொடுப்பது மனசை ஹாப்பியாக்கும்.

சிம்மம்

உத்தியோக முயற்சி கைகூடும். உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவாங்க. பாதியில் நின்ற பணிகள் மீதியும் தொடரும். குடும்பத்தில் உள்ளவங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து ஹாப்பியா இருப்பீங்க.  பெரிய மனிதர்கள் கனெக்ஷன் கிடைக்கும். அலைச்சல், மனக்குழப்பம் அதிகரிக்கும். நேர்மறை சிந்தனையை வளர்த்துக்குங்க. குடும்பப்பிரச்சினை சரியாகக்கூடும். அக்கம் பக்கம் உள்ளவங்கள அனுசரித்துச் செல்லுங்கள். திருமணத்தடை வரலாம். பிறரை நம்பி ஆபீஸ் பொறுப்பை ஒப்படைக்காதீங்க. விரயங்களும், மாறுதல்களும் ஏற்படும்.  கற்பனையாய் பயந்துக்கிட்டுக் கவலைப்படுவீங்க தேவையில்லாத மனக்குழப்பம் அதிகரிக்கும். இதுபோன்ற நேரத்தில் தைரியமும், தன்னம்பிக்கையும் அவசியம். எதுவுமே நிதானப்போக்கில்தான் நடைபெறும். ஆனாலும் நல்லவிதமாய் நிறைவேறும்.

கன்னி

கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்குமுங்க. தொழிலில் இருந்த தொல்லை அகலும். நேற்று பாதியில் நின்ற பணிகளை மீதியும் தொடரும் எண்ணம் மேலோங்கும். பக்கத்து வீட்டாருடன் ஏற்பட்ட பகை மாறும். தள்ளிப்போன சுப நிகழ்ச்சிகள் தானாக நடைபெறுங்க. பயணங்களும், அவற்றால் ஆதாயமும் உண்டு. நெஞ்சம் மகிழும் சம்பவங்கள் ஒன் பை ஒன்னாக  நடைபெறும். சொத்துப்பிரச்சினை ஒரு வழியா முடிவுக்கு வரும். அடகு நகையை மீட்கப்போறீங்க பாருங்க. ஹாப்பியான விஷயங்களுக்காக செலவுகள் அதிகரிக்கும். வீடு மாற்றங்களும், இடமாற்றங்களும் அமையலாம். எதுக்கும் கொஞ்சம் முன் யோசனையுடன் செயல்படுங்க. அடிப்படை வசதிகளைப் பெருக்கிக் கொள்ள அதிகம் செலவிடும் சூழ்நிலை ஏற்படும். மனசுல யார் மேலயும் வஞ்ச எண்ணம் வராமல் பார்த்துக்குங்க. நல்லவங்களை மட்டும் நட்பு வட்டத்துல வைச்சுக்குங்க.

துலாம்

மகிழ்ச்சி ஜாஸ்தியாகும். புதிய நண்பர்கள் மூலம் லாபம் பொருளாதார நிலை உயர வழிவகுத்துச் கொள்வீங்க. காஸ்ட்லியாகும்னு நினைச்ச விஷயம் ஒண்ணு குறைஞ்ச செலவில் முடிவிற்கு வரும். உல்லாசப் பயணம் போவீங்க. ஒருசிலருக்கு வெளிநாட்டு வாய்ப்பு கைகூடும். உத்தியோகத்தில், மேலதிகாரிகள் உங்கள் திறமையைப் பார்த்து வியந்து போவாங்க. அனைத்தும் நல்லவிதமாக நடைபெற வழிபாடு உங்களுக்கு ரொம்பவும் உதவி புரியும். நட்பால் நன்மை கிட்டும். ஆரம்பத்தில் அச்சறுத்தலாக தோன்றிய தகவல் முடிவில் ஆதாயத்தைக் கொடுக்கும். வாழ்க்கைத்துணை வழியே வந்த பிரச்சினை அகலும். வெளி உணவுகளை உண்பதைத் தவிர்ப்பது நல்லதுங்க. மனசுல நல்ல எண்ணங்கள் எழும். புண்ணிய காரியங்களில் கவனம் செல்லும். உற்சாகம் அதிகரிக்கும். உங்க வசீகரத் தன்மை கை கொடுத்து சக்ஸஸ் தரும்.

விருச்சிகம்

திருமணத் தடை அகல கொஞ்சம் அதிகமா முயற்சி தேவைப்படும். அது பற்றிக் கொஞ்சம் கவலைப்படுவீங்க. குடும்ப ரகசியங்களை வெளியில் சொல்வது, பிறரை விமர்சிப்பது போன்றவற்றால் பிரச்சினை உருவாகலாம். எனவே கேர்ஃபுல்லா இருங்க. பிறரிடம் உங்களது ஆபீஸ் பொறுப்புகளை ஒப்படைக்காதீங்க. விரயங்கள் லேசா அதிகரிக்கும். வீடு மாற்றங்களும், இடமாற்றங்களும் கொஞ்சம் தள்ளிப்போகுமுங்க. எதிலும் முன் யோசனையுடன் செயல்படுங்க. அடிப்படை வசதிகளைப் பெருக்கிக் கொள்ள அதிகம் செலவிடும் சூழ்நிலை ஏற்படக்கூடும். அனைத்தும் நல்லவிதமாக நடைபெறணும்னா கொஞ்சம் வெயிட் பண்ணுங்க போதும். குழந்தைங்க பற்றி .. குறிப்பா அவங்க மார்க் பற்றி சற்று டென்ஷன் இருக்கும்தான். ஆனால் அது டெம்ப்ரரி டென்ஷன் என்பதை நினைவில் வெச்சுக்குங்க. எல்லாம் சரியாகப்போகுது. உங்க துறை சார்ந்த விஷயம் ஒன்றை முனைந்து முடிச்சு வெற்றியும் பாராட்டும் பெறுவீங்க.

தனுசு

மாற்றங்களால் ஏற்றம் உண்டாகுமுங்க. இழப்புகளை ஈடுசெய்யப் புதிய வழி கண்டுபிடிப்பீங்க. பழைய பிரச்னை ஒண்ணு நல்ல முடிவிற்கு வரும். நிழல்போல தொடர்ந்த கடன் சுமை குறையும். அவசர முடிவெடுப்பதைத் தவிர்க்க வேண்டிய வாரமுங்க. ஆரோக்கியத் தொல்லை உண்டு. சேமிப்புகள் கரையலாம். உதவி செய்வதாய் சொன்னவர்கள் கடைசி நேரத்தில் கையை விரிக்கலாம். வந்த துயரங்கள் வாசலோடு நின்றுவிட்டுப் போயிடுங்க. வரன்பார்த்து, பிள்ளைகளின் கல்யாண முயற்சிகள் கைகூடவில்லையேன்னு மனக்குழப்பம் அடைந்த பெற்றோர்கள் வரன்கள் திருப்திகரமான முறையில் வந்து ஆச்சரியத்தில் ஆழ்த்தப்போறதுங்க பார்த்துக்கிட்டே இருங்களேன். வங்கியின் கடனுக்காக மனுச் செய்திருந்தவங்களுக்கு குட் நியூஸ் வரும். உறவினர் மற்றும் குடும்பத்துல சமீபமாய்க் கடந்த காலத்தில் இருந்துக்கிட்டிருந்த கசப்புகள் அகலும்.

மகரம்

பெண்கள் நிதானத்துடன் செயல்பட்டால் தான் நிம்மதி கிடைக்கும். மற்றவர்களுக்குப் ஜாமீன் போடுவதைத் தவிர்க்க வேண்டிய நேரமிது. சேமிப்புகள் கரையலாம். திடீர்த் திருப்பங்கள் அதிகரிக்கும்.  மற்றவர்களை நம்பி ஒப்படைத்த பொறுப்புகள் மீண்டும் உங்களிடமே வந்து சேரும். கவனமுடன் செயல்பட வேண்டிய வாரம். தான் உண்டு தன் வேலை உண்டுன்னு இருந்தா நல்லதுங்க. பண நெருக்கடியால் பக்கத்தில் உள்ளவர்களிடம் உதவி கேட்கும் சூழ்நிலை உருவானாலும் கடைசி நிமிஷத்தில் ஏற்பாடு செய்து சமாளிச்சுடுவீங்க. விரயங்களிலிருந்து விடுபட விழிப்புணர்ச்சி தேவை. உறவினர் பகை ஏற்படாமல் பார்த்துக்குங்க. முன்னோர் வழிபாட்டை முறையாகச் செய்துடுங்க. பொழுது போக்கு அம்சங்கள்ல கவனம் செல்லும். ஜாலிய உங்களுக்கு வேண்டியவங்ககூட ஊர் சுத்துவீங்க. சின்னச் சின்ன சந்தோஷங்கள் உற்சாகம் தரும்.

சந்திராஷ்டமம் : ஏப்ரல் 18 முதல் ஏப்ரல் 20 வரை

சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.

கும்பம்

உங்களுக்கு  எங்கேயிருந்தோ திடீர்னு இத்தனை காலம் இல்லாத நல்ல பலன்கள் வந்து சேரும். நிதி நிலைமை திருப்தியா இருக்கும். அது நிம்மதி  தரும்.  பெண்களால் நன்மை உண்டுங்க. உதிரி வருமானங்கள் அங்கே இங்கே கிடைச்சுடும். எடுத்த காரியம் ஈஸியா முடியும். மாமன், வகை ரிலேடிவ்ஸ் கிட்டேயிருந்து மகத்தான ஒத்துழைப்பு கிடைக்கும். குழந்தைங்களோட திருமண முயற்சி கைகூடும். உற்சாகத்துடன் வேலை பார்ப்பீங்க.  சகோதர ஒற்றுமை நல்லாயிருக்கும் அவங்க உதவி செய்வாங்க. புதிய ஒப்பந்தங்கள் அடுக்கடுக்காக வந்து சேரும். வீடு மாற்றம் நாடு மாற்றம் சம்பந்தமாக எடுத்த முயற்சிகளில் தாமதம் உண்டாகும். உறவினர்களின் ஒத்துழைப்பு குறையலாம். எதுவுமே திட்டமிட்டபடி நடக்காமல் தாமதமாகலாம். உடனே மூஞ்சியைத் தொங்கப்போட்டுக்கிட்டு எரிச்சல் அடைய வேணாம். சீக்கிரம் சரியாகும்.

சந்திராஷ்டமம் : ஏப்ரல் 20 முதல் ஏப்ரல் 23 வரை

சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.

மீனம்

மனநிறைவு ஏற்படும். உறவினர்கள் உங்கள் குரலுக்கு செவி சாய்ப்பர். ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும். பிள்ளைகளை நெறிப்படுத்துவதில் ஆர்வம் காட்டுவீங்க. எதிர்மறை எண்ணங்களை தவிர்ப்பது நல்லது. சுபநிகழ்ச்சி  பற்றிய  பேச்சுகள் இந்த வாரம் முடிவாகும். பெண்கள், பிறந்த வீட்டிற்கும், புகுந்த வீட்டிற்கும் பெருமை சேர்ப்பீங்கம்மா. தந்தை வழி ஆதரவு உண்டு. பிள்ளைகளால் பெருமை சேரும். வெளி மனிதர்கள்கிட்ட கொஞ்சம் கவனமாக செயல்படணுங்க. மற்றவர்களிடம் பொறுப்பை ஒப்படைத்தால் அதுசிறப்பாக நடைபெறுமா என்பது சந்தேகம்தான். அல்லது அவ்வப்போது கவனிச்சுக்கிட்டே இருக்கணுங்க. அதைவிட நீங்களே செய்துடலாம். பழைய கோப தாபங்கள் மறைஞ்சு மனசில் சந்தோஷத்துடனும் நிம்மதியுடனும் நண்பர்கள்கிட்ட பழகுவீங்க. தடைப்பட்ட மற்றும் தாமதமான விஷயங்கள் டக்கென்று நடக்கும். தன வரவு  அதிகமாகும்.

சந்திராஷ்டமம் : ஏப்ரல் 23 முதல் ஏப்ரல் 25 வரை

சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.