சென்னை: வாக்காளர்கள் தங்களது வாக்கினை செலுத்த, அடையாள அட்டையான வோட்டர் ஐடி இல்லை என்பதால் அதிர்ச்சி அடைய தேவையில்லை.  அவர்கள் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள  ஆதார் கார்டு உள்பட  11 ஆவணங்களில் ஒன்றைக்கொண்டு தங்களது வாக்கினை செலுத்தலாம்.
அதுபோல பூத் சிலிப் இல்லாதவர்கள் வோட்டர்ஹெல்ப்ஆப் மூலமோ அல்லது வாக்குச்சாவடி அருகே அமைக்கப்பட்டுள்ள முகவர்களிடம் பூத்சிலிப் பெற்றுக்கொண்டு தங்களது வாக்கினை செலுத்தமுடியும்.
நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழ்நாடு உள்பட 21 மாநிலங்களில் இன்று காலை 7மணிக்கு தொடங்கி மாலை 6மணி வரை நடைபெறுகிறது. அதன்படி,  தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகள் உட்பட,  நாடு முழுவதும் 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

தேர்தல் ஆணையத்தின்படி வாக்காளர்கள் வாக்களிக்க வாக்காளர் அடையாளம் அவசியம். அப்படி வாக்களிக்க வாக்காளர் அடையாள அட்டை (வோட்டர் ஐடி) பிரதான ஆவணமாக கருதப்படுகிறது. இது, வாக்காளர்களின் வசிக்கும் இடம், பிறந்த தேதி போன்ற முக்கிய விவரங்களை உறுதிப்படுத்தும் அதிகாரப்பூர்வ ஆவணமாக உள்ளது. இந்த ஐடி இல்லாதவர்கள், மாற்று ஆவணங்களைக் காட்டியும் தங்களது வாக்கினை செலுத்தலாம்.

வாக்களிப்பதற்கு முன், இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா என்பதை ஒருவர் சரிபார்க்க வேண்டும். நீங்கள் வாக்களிப்பதற்கு முன் இந்தப் பட்டியலைச் சரிபார்ப்பது மிகவும் முக்கியமானது. ஏனெனில் அதில் உங்கள் பெயர் இருப்பது வாக்களிப்பதற்கான உங்கள் தகுதியை உறுதிப்படுத்துகிறது. வாக்காளர் அடையாள அட்டை இல்லாத பட்சத்தில், தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டுள்ள மாற்று ஆவணங்களை வாக்காளர் பயன்படுத்தலாம்.

வோட்டர் ஐடிக்கான மாற்று ஆவணங்கள்:
தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருந்தால், அடையாளத்தை உறுதி செய்ய வோட்டர் ஐடி மற்றும் அதற்கு மாற்றாக கீழே குறிப்பிடப்பட்டுள்ள 11 ஆவணங்களில் எதேனும் ஒன்றை நீங்கள் பயன்படுத்தலாம்.

  1. ஆதார் அட்டை
  2. MNREGA வேலை அட்டை (100 நாள் வேலை திட்டத்திற்கான அடையாள அட்டை)
  3. வங்கி/அஞ்சல் அலுவலகத்தால் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பாஸ்புக்குகள்,
  4. தொழிலாளர் அமைச்சகத்தின் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட சுகாதார காப்பீட்டு ஸ்மார்ட் கார்டு
  5. ஓட்டுனர் உரிமம்
  6. பான் கார்டு
  7. NPR இன் கீழ் RGI வழங்கிய ஸ்மார்ட் கார்டு
  8. இந்திய பாஸ்போர்ட், புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம்
  9. மத்திய/மாநில அரசு/பொதுத்துறை நிறுவனங்கள்/பப்ளிக் லிமிடெட் நிறுவனங்களால் ஊழியர்களுக்கு வழங்கப்படும் புகைப்படத்துடன் கூடிய சேவை அடையாள அட்டைகள்
  10. எம்.பி.க்கள்/எம்எல்ஏக்கள்/எம்எல்சிகளுக்கு வழங்கப்படும் அதிகாரப்பூர்வ அடையாள அட்டைகள்
  11. தனிப்பட்ட ஊனமுற்றோர் அடையாள அட்டை (UDID) அட்டை, இந்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அடையாள அட்டை

பூத் ஸ்லிப் கட்டாயமா?

தேர்தலையொடிடடி, வாக்காளர்களுக்கு வீடு தேடி சென்று தேர்தல் அலுவலர்கள் பூத் ஸ்லிப்(வாக்காளா் தகவல் சீட்) கொடுத்து வந்தனர். ஆனால், பலருக்கு இன்னும் பூத் சிலிக் கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. ஆனால்,  தமிழகத்தில்  90 சதவிகிதம் பேருக்கு பூத் ஸ்லிப் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், பூத் ஸ்லிப் கிடைக்கவில்லை என்றால் வோட்டர் ஹெல்ப்லைன் செயலி (voter helpline app) பதிவிறக்கம் செய்து, அதில் விவரங்களை பதிவிட்டால் எந்த வாக்குச்சாவடியில் வாக்களிக்க வேண்டும் என்ற விவரங்கள் தெரிய வரும்.

கீழே உள்ள லிங்க் -ஐ Click செய்து உங்கள் வாக்காளர் அட்டை எண்ணை Type செய்தால் உங்கள் பூத் சிலிப் வந்துவிடும்

https://electoralsearch.eci.gov.in/

மேலும், பூத் ஸ்லிப் இல்லையென்றாலும் தேர்தல் ஆணையம் வரையறுத்துள்ள 13 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை காண்பித்து வாக்களிக்கலாம்