பிரபல எழுத்தாளரும், பத்திரிகை டாட் காம் இணையதளத்தின் ஆஸ்தான ஜோதிடருமான  திருமதி வேதாகோபாலன்  இன்று பிறந்துள்ள ‘குரோதி தமிழ் புத்தாண்டு’ பலன்களை ஒளி ஒலி (வீடியோ)  வடிவில் கொடுத்துள்ளார்.

த‌மி‌ழ் ஆ‌ண்டுக‌ள் மொ‌த்த‌ம் 60 ஆகு‌ம். இதில் ஒவ்வொரு ஆண்டுக்கும் ஒரு பெயர் உண்டு.  தற்போது பிறந்துள்ளது 38வது ஆண்டு.  இந்த ஆண்டின் பெயர் குரோதி.  

குரோதி தமிழ் புத்தாண்டானது ஒருவரது வாழ்வில்  என்னென்ன மாற்றத்தை கொடுக்கும், எதிர்காலம் எப்படி இருக்கும்?, தொழில், வியாபாரம், வேலை, வாழ்வாதாரம் உள்பட அனைத்து விஷயங்கள் குறித்து திருமதி வேதாகோபாலன்  துல்லியமாக கணித்து வீடியோ வாயிலாக வாசகர்கள் எளிதில் தெரிந்து கொள்ளும் வகையில் தந்துள்ளார்.

பத்திரிகை டாட் காம் வாசர்களுக்காக,  மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கு உரிய  27 நட்சத்திரங்களுக்கான பலன்களை அனைத்து தரப்பினரும் புரிந்து கொள்ளும் வகையில், வீடியோ வாயிலாக தந்திருக்கிறார்.

அசுவினி, பரணி, கார்த்திகை, ரோகிணி, மிருகசீரிடம், திருவாதிரை, புனர்பூசம், பூசம், ஆயில்யம், மகம், பூரம், உத்திரம், அஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம், அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி ஆகிய 27 நட்சத்திரங்கள் உள்ளன.  ஒவ்வொரு நட்சத்திரத்துக்கும் தனித்தனியே யான குணங்கள் உண்டு.  இந்த நட்சத்திரமானது,  ராசியின் குணத்தையும் சேர்த்து உள்வாங்கிக் கொண்டு, அதற்கேற்ற பலன்களையும், செயல்களையும் வெளிப்படுத்துகின்றன.

இந்த புத்தாண்டில், ஒவ்வொருவரும், வாழ்க்கை சீராக அமைய குடும்ப பந்தம் அவசியம் என்பதை சபதமாக ஏற்று,   குடும்பத்தில் ஒற்றுமை நிலவவும்,  ஒருவருக்கொரு வர் விட்டுக்கொடுத்து, மனம் விட்டுப் பேசி அன்புடன் இருந்து,  வீண் சந்தேகங்கள், வீண் விவாதங்கள் தவிர்த்து. அனைவரிடமும் சகஜமாக பழகவும், ஏழை, எளியோருக்கு உதவுதல் போன்ற நற்குணங்களை குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுத்தும் வளர்க்க வேண்டியதை தங்களது  கடமையாக நினைத்து செயல்படுங்கள்.

வாசகர்கள்  தங்களுடைய நட்சத்திற்கு ஏற்ற தமிழ் புத்தாண்டு பலன்களை கண்டு, அதன்மூலம் தங்களது வாழ்க்கையை சீரமைத்து வெற்றிபெற வாழ்த்துகிறோம்..

இதோ நீங்கள் எதிர்பார்த்த…  உங்களுக்குரிய  நட்சத்திர பலன்கள்…

அஸ்வினி | பரணி | கிருத்திகை (கார்த்திகை) –  நட்சத்திர பலன்கள்

ரோகிணி | திருவாதிரை | மிருகசீரிஷம்நட்சத்திர பலன்கள்

ஆயில்யம், புனர்பூசம், பூசம் நட்சத்திர பலன்கள்

உத்திரம்| பூரம் | மகம் – நட்சத்திர பலன்கள்

சித்திரை | சுவாதி | ஹஸ்தம் – நட்சத்திர பலன்கள்

விசாகம்| அனுஷம்| கேட்டை –  நட்சத்திர பலன்கள்

உத்திராடம் | பூராடம் | மூலம் –  நட்சத்திர பலன்கள்

அவிட்டம் | சதயம் | திருவோணம் –  நட்சத்திர பலன்கள்

பூரட்டாதி | உத்திரட்டாதி | ரேவதி –  நட்சத்திர பலன்கள்

முற்றும்.