சென்னை:
தமிழகஅரசு இன்று 5ம் வகுப்பு மற்றும் 8 வகுப்புக்கான பொதுத்தேர்வை ரத்து செய்வதாக அறிவித்து உள்ளது. இது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், பத்திரிக்கை டாட் காம் இணைய இதழில், வெளியான சிறப்பு கட்டுரையின் தாக்கமே, பொதுத்தேர்தலை ரத்து செய்ய அறிவுறுத்தி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
மத்தியஅரசுக்கு ஜால்ரா போட்டு வரும் தமிழகஅரசு, மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய கல்விக்கொள்கையின் படி, 5வது மற்றும் 8வது வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என அறிவித்தது. இந்த விவகாரத்தில், தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், முன்னுக்கு பின் முரணாக தகவல்களை தெரிவித்த நிலையில், இறுதியாக நடப்பாண்டே பொதுத்தேர்வு நடத்தப்படும் என அதிரடியாக கூறினார்.
அரசின் இந்த அறிவிப்பு தமிழக மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், கல்வியாளர்களும், சமூக ஆர்வலர்களும் கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.
பத்திரிகை டாட் காம் (www.patrikai.com) இணைய இதழும் இதுதொடர்பாக பல்வேறு செய்திகளை வெளியிட்டு எச்சரிக்கை செய்து வந்தது. மேலும், நேற்றைய இதழில், பொதுத்தேர்வுகள்.. தீவிரவாதத்தைவிட பயங்கரமானவை என்ற தலைப்பில் மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் எழுதிய சிறப்புக்கட்டுரை வெளியானது.
இதில், முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் ஏன் ஆல் பாஸ் திட்டத்தை கொண்டு வந்தார் என்றும், சிறு பிள்ளை களுக்கு தேவை கவலையில்லா கல்வி, வயதுக்கேற்ற கல்வி, எளிமையான கல்வி என்பதை வற்புறுத்தி காட்டமாக கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.
இந்த கட்டுரை சமுக வலைதளங்களிலும் வைரலான நிலையில், இதை படித்த அரசியல் வாதிகள், அதிகாரிகள் போன்றோர் அரசுக்கு எச்சரிக்கை சங்கு ஊதியதாக கூறப்படுகிறது. மேலும், இன்றைய கேபினட் கூட்டத்தின் போதும் உயர் அதிகாரிகள் பொதுத்தேர்வு தொடர்பாக, பத்திரிகை டாட் காம் இதழின் கட்டுரையை சுட்டிக்காட்டி அரசுக்கு எச்சரிக்கை செய்ததாகவும் கூறப்படுகிறது.
மேலும், 2021ம் ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை கைப்பற்ற துடிக்கும் திமுக, பிரபல அரசியல் சாணக்கியர் பிரஷாந்த் கிஷோரை ஆலோசனையை பெற்று வரும் நிலையில், 5, 8ம் வகுப்பு பொதுத்தேர்வு விவகாரத்தை டார்கெட் செய்து, மக்களை அதிமுகவுக்கு எதிராக திருப்பி விட வாய்ப்பு இருப்பதாகவும் எடுத்துரைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாகவே 5 மற்றும் 8ஆம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டதாக கோட்டை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே கல்வி அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்ட அறிவிப்புகள் தொடர்பாக நமது பத்திரிகை டாட் காம் இதழில் வெளியான முக்கிய செய்திகளில் சில…
5, 8ம் வகுப்பு பொதுத்தேர்வு: மோடிஅரசின் ஊதுகுழலாக, மாறி மாறிப் பேசும் செங்கோட்டையன்
மாணவர்களுக்கு மடிக்கணினி வாங்க நிதியில்லை! கைவிரித்த கல்வி அமைச்சர் செங்கோட்டையன்
மேலும் பரபரப்பான அரசியல் மற்றும் ருசிகர செய்திகளுக்கு பத்திரிகை.காம் இணைய இதழை தொடர்ந்து பாருங்கள்…