மேஷம்

வெளியூரிலிருந்து நல்ல செய்தி கிடைக்கும். நண்பர்களும் உறவினர்களும் ஆதரவாக இருப்பார்கள். எடுத்த காரியங்களில் ஏற்றம் பெறுவீங்க. மற்றவர்களுக்கு உதவி செய்வீங்க. மங்கல காரியங்கள் சிறப்பாக நடக்கும். வெளிவட்டார செல்வாக்கு அதிகரிக்கும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். தான தர்மங்கள் செய்வீங்க. உழைப்புக்குத் தகுந்த ஊதியம் கிடைக்கும். வியாபார விருத்திக்காக வெளியூர்ப் பயணம் செல்வீங்க. அதே நேரத்தில் வாகனம் ஓட்டும் போது மிகுந்த எச்சரிக்கை தேவை. பண வரவு கண்டிப்பாக இருக்கும்.  லாட்டரி பந்தயங்களில் வெற்றி கிடைக்கும். நண்பர்கள் உதவி செய்வார்கள். கவலைப்பட்ட உங்களுக்கு அதிலிருந்து நிவாரணம் கிடைக்கும். கடுமையான முயற்சி செய்து தொழிலை கவனிக்க வேண்டும். ஏதோ ஒரு வகையில் நிம்மதி . வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். கடவுள் பக்தியும் அதிகரிக்கும்.

சந்திராஷ்டமம்: ஆகஸ்ட் 23 முதல் ஆகஸ்ட் 26 வரை

சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருக்க வேண்டும்.

ரிஷபம்

விற்க வேண்டும் என்ற நினைத்த சொத்துவிற்பனை தள்ளிக் கொண்டே போகும். தொழிலில் புதிய முதலீடுகள் செய்யலாம். அகலக் கால் வைப்பது ஆபத்து.  வெளியூர் பயணங்களில் வீண் அலைச்சல் மட்டுமே மிஞ்சும். காரியத்தடைகள் மன நிம்மதியை கெடுக்கும். கடந்த வார கவலைகள் நீங்கி சந்தோசத்தில் திளைக்க போகிறீர்கள். குடும்பத்தில் நல்ல காரியங்கள் நடப்பதற்கான வேலைகள் ஆரம்பமாகும். கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கையாக இருங்கள். அனாவசியமான செலவுகளை குறைத்துக் கொள்ளுங்கள். வியாபாரத்திற்கு அதிக முதலீடு போட வேண்டிய கட்டாயம் ஏற்படும். அரசாங்க அதிகாரிகளை பகைத்துக் கொள்ள வேண்டாம். புதிய தொழில் தொடங்க திட்டம் போடுவீங்க. வியாபாரத்தில் அதிக லாபம் பார்ப்பீர்கள். பெரியோர்கள் சந்திப்பு நன்மைக்கு வழிவகுக்கும். உங்களை வீழ்த்த நினைத்த எதிரிகள் வீழ்ந்து போவார்கள்.

சந்திராஷ்டமம்: ஆகஸ்ட் 26 முதல் ஆகஸ்ட் 28 வரை

சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருக்க வேண்டும்.

மிதுனம்

செல்வம் செல்வாக்கு அதிகரிக்கும். வேலை இடத்தில் நல்ல மரியாதை கிடைக்கும்.  கூட்டுத் தொழில் அதிக லாபத்தை கொடுக்கும். ரியல் எஸ்டேட் தொழிலில் புதிய நிலையை எட்டுவீங்க. . வருகின்ற வாய்ப்பை தவற விடாதீங்க.  மனைவி மக்களால் வீண் தொல்லை உண்டாகும். மேலதிகாரிகளின் ஆதரவால் வேலையில் சாதனை புரிவீங்க. வீண் அலைச்சல் ஏற்பட்டாலும் அயராத முயற்சியால் வெற்றி காண்பீர்கள். மனைவி மக்களிடம் அன்பாக நடந்து கொள்ளுங்கள். புதிய நகைகள் வாங்கி கொடுத்து மனைவியை அழகு பார்ப்பீர்கள். விரோதிகள் கூட நண்பர்களாக மாறி உதவி செய்வார்கள்.. இக்கட்டான நேரத்தில் நண்பர்கள் உதவி செய்வார்கள். வியாபாரம் சீராக நடக்கும்.  வேலைக்காக அலைந்தவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். சம்பள உயர்வு வேலை மாற்றம் சிலருக்கு மன மகிழ்ச்சியை தரும்.

சந்திராஷ்டமம்: ஆகஸ்ட் 28 முதல் ஆகஸ்ட் 30 வரை

சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருக்க வேண்டும்.

கடகம்

வியாபாரத்தில் மிகச்சிறந்த முன்னேற்றம் காண்பீர்கள். தடைபட்ட காரியங்கள் சரளமாக நடக்கும். ரியல் எஸ்டேட் தொழிலில் நம்பி முதலீடு செய்யலாம். தொழிலில் புதிய யுத்திகளை புகுத்துவீங்க. உறவினரிடம் சற்று எட்டியே இருங்கள். நிலம் சம்பந்தப்பட்ட வழக்குகள் சாதகமாக முடியும். கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும். வெளியூர் பயணங்களால் அதிக நன்மை கிடைக்கும். வெளிநாட்டு செய்திகள் மனதிற்கு மகிழ்ச்சியை உண்டாக்கும். வியாபாரத்தை விருத்தி செய்யும்.  போட்டி போட்டு வியாபாரத்தை நடத்துவீங்க. புதிய முதலீடுகளால் தொழிலை விரிவுபடுத்துவீங்க.  கடன் தொல்லைகள் கவலையை ஏற்படுத்தும். கணவன் மனைவி உறவு இறுக்கமாக இருக்கும். வண்டி வாகனங்களில் செல்லும்போது மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குடும்பத்தில் பொறுமையாக நடந்து கொள்வது அவசியம்.

சிம்மம்

துணிந்து காரியத்தில் இறங்குங்கள். வெற்றியை சந்திப்பீர்கள். திருமண காரியங்கள் இல்லத்தில் நடக்கும். திடீர் பணவரவால் திக்கு முக்காடி போவீங்க. மகிழ்ச்சியான சம்பவங்கள் வீட்டில் நடக்கும். வியாபாரத்தில் புதிய நண்பர்கள் கூட்டு சேர்வார்கள். ஆன்லைன் வர்த்தகங்கள் அமோகமான லாபத்தை கொடுக்கும். கணினி துறையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உங்களுக்கு ஏற்பட்ட துன்பத்தை போக்க உறவினர்களும் நண்பர்களும் முனைப்பு காட்டுவார்கள்.  கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கையாக இருங்கள். நீங்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்த பணம் கைக்கு வந்து சேரும். குடும்பத்தில் நல்ல காரியங்கள் நடக்கும். சந்திர பகவானின் சஞ்சாரம் தொழிலில் ஏற்ற இறக்கத்தைக் கொண்டு வரும். செவ்வாய் நான்காம் வீட்டில் இருக்கிறார். செய்யாத குற்றத்திற்கு தண்டனை அனுவித்த நலைமாறும்.

கன்னி

நீங்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்த பணம் கைக்கு வந்து சேரும். குடும்பத்தில் நல்ல காரியங்கள் நடக்கும். ச தொழிலில் ஏற்ற இறக்கத்தை எதிர்பாருங்கள். இந்த வாரம் கிரகங்கள் நன்மை செய்யும் அமைப்பில் உள்ளன.  இந்த சாதகமான நேரத்தில் எதிர்காலத்தைப் பற்றிய திட்டமிடலையும் அதற்கான அடிப்படைகளையும் அமைத்துக் கொள்ளுவது நல்லது. சுமைகள் எதையும் கொடுக்காத வாரம் இது. கடந்த இரண்டு, மூன்று வாரங்களாக உழைப்புக்கேற்ற பலன் கிடைக்காமல் இருந்துச்சு. முயற்சி செய்தும் காரியம் கைகூடாமல் டென்ஷன் ஆனீங்க.  ஸம் டைம்ஸ் அதிர்ஷ்டம் இல்லை என்று மனசுக்குள் புலம்பினீங்கதானே? டோன்ட் ஒர்ரி. இனி அதெல்லாம்  இல்லை. செம்ம ஜாலியான வாரம் இது. ரிலேடிவ்ஸ் கூட ஹாப்பியா இருப்பீங்க. பிரதர்ஸ் சிஸ்டர்ஸ்க்கு உங்களால் நல்ல விஷயங்கள் நடக்கும்.

துலாம்

அவங்க மனசு உங்களை வாழ்த்தும். குழந்தைங்க வாழ்க்கையில் நீங்க ஆசையா எதிர்பார்த்துக்கிட்டிருந்த விஷயங்கள் நடக்கும். மனைவிக்கு / கணவருக்கு லாபங்களும் நன்மைகளும்  ஹாப்பி நியூஸும் வரும். எந்தக் காரியமும் தடைபடாமல் நிறைவேறும் வாரம் இது. வார பிற்பகுதியில் அதிக  நல்லபலன்கள் கிடைக்கும். சிலருக்கு தொழில் அல்லது உத்யோகத்தில் ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும் பணவரவிற்கு குறை இருக்காது. எதையும்  சமாளித்து விடுவீங்க அனைத்திலும் எதிர்பாராத வெற்றியும், சிலருக்கு மறைமுக தன லாபமும் உண்டு.  சொந்த ஊரிலிருந்து தள்ளி இருப்பவர்கள் நன்மைகளை அடையப் பெறுவீங்க. வேலைக்காக வெளியூர் போறவங்களுக்கு நல்ல பலன்கள் உண்டு. எதிரிகள் நேரம் பார்த்துக்கிட்டிருக்காங்க… பேசும் போது வார்த்தைகளில் கவனமாக இருங்க. பயணத்தின்போது சந்தோஷ நிகழ்ச்சிகள் உண்டு.

விருச்சிகம்

தொழிலில் மிகுந்த முன்னேற்றம் ஏற்படும். திட்டம் போட்டு வெற்றி பெறுவீங்க. திருமணம் போன்ற காரியங்களுக்கு செலவு செய்வீங்க. மேலதிகாரிகளின் தொந்தரவு மன அமைதியைக் கெடுக்கும். லாட்டரி பந்தயங்களில் ஈடுபடாதீங்க. வியூகம் அமைத்து வியாபாரத்தில் வெற்றி பெறுவீங்க. பெரியோர்களின் சந்திப்பால் அனுகூலமான காரியங்கள் நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். கூட்டு வியாபாரத்திற்கு வழித்தடம் அமைப்பீர்கள். உங்களை வீழ்த்த நினைத்த எதிரிகள் பணிந்து போவார்கள். வருமானம் கிடைக்கும் வாரம் இது. உங்களில் சிலருக்கு எடுக்கும் முயற்சிகளில் ஒன்று சுலபமாக முடிந்து நன்மையும், லாபமும் உண்டு. வெளிநாட்டு வேலைக்காக விசா எதிர்பார்த்து காத்திருந்தவங்களுக்கு இந்த வாரம் நல்லவை நடக்கும். சிலருக்கு வெளிநாட்டு பயணம் அமையும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் செய்வோர் நன்மை

தனுசு

வெளிநாட்டு குடியுரிமை பற்றிய நல்ல தகவல் வரும். கலைஞர்களுக்கு இது நல்லவாரம். பெண்களுக்கு அலுவலகங்களில் இருந்து வந்த தொந்தரவுகள் குறைய ஆரம்பிக்கும். இதுவரை நடந்து வந்த எதிர்மறை பலன்கள் இனிமேல் இருக்காது. எதிர்காலத்தில் நீங்க நன்றாக இருக்கப் போவதற்கான முயற்சிகளை இப்போதே துவங்குவீங்க. தொட்டது துலங்கும். கேட்டது கெடைக்கும். நெனைச்சது நடக்கும். தன்னம்பிக்கை ஜம்மென்று உயரும். மனசில் உற்சாகமும் தன்னம்பிக்கையும் இன்கிரீஸ் ஆகும். உங்களுக்கோ பிறருக்கோ கல்விக்குப் பயன்படும் விஷயங்களுக்காகச் செலவு செய்வீங்க –  இந்த வாரம் மகான்களின் ஆசியும், புதிய தொடர்புகள் நன்மைகளும் ஏற்படும். போட்டி, பந்தயங்களில் வெற்றி கிடைக்கும். புத்திர பாக்கியம், சுபகாரிய நிகழ்ச்சிகள் ஆகியவற்றால் இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும்.

மகரம்

புதிய தொழில் தொடங்க எடுக்கப்படும் முயற்சிகள் வெற்றி பெறும் காலம் கனிந்து வரும்.  அரசு பணியில் உள்ளவர்களுக்கு அதிகாரிகளின் அன்பு மற்றும் ஆதரவால் பணி உயர்வு நினைத்தபடி கிடைக்கும்.  கவர்ச்சிகரமான பொருட்களை பரிசாக அறிவித்து வியாபாரிகள் உங்கள் வாடிக்கையாளர்களை கவர்ந்து இலாபத்தை அதிகரித்துக் கொள்வர். சில நேரங்களில் சுறுசுறுப்பற்ற நிலையும், மனோபயம் நிலவும். கல்வியில் தேர்ச்சி ஏற்பட கடின உழைப்புத் தேவை. குடும்பத்தில் ஏற்பட்ட சச்சரவை நிறுத்தப் பாடுபட வேண்டுமே தவிர அதை அதிகரிக்கக்கூடாது. வாழ்க்கைத் துணைவரிடம் இருந்து வந்த வாக்குவாதங்களும், கருத்து வேறுபாடுகளும், கசப்பான அனுபவங்களும் இனிமேல் தீரும். பெண்கள் சம்பந்தப்பட்ட விஷயங்கள் நிறைவாக முடியும். பேச்சில் கவனமாக இருக்க வேண்டும்.

கும்பம்

நீண்டதூரப் பயணங்களால் லாபங்கள்  இருக்கும். வெளிநாட்டுப் பயணங்களும் உண்டு. தந்தைவழியில் ஆதரவு உண்டு. கொடுக்கல் வாங்கல்களில் கவனமாக இருப்பது நல்லது. கடன் தொல்லைகள் தீரும். மக்கள் பிரதிநிதிகள், அரசு ஊழியர்கள் போன்றவர்கள் எதையும் நிதானமுடன் அணுக வேண்டும். நட்புக் கிரகங்கள் வலுவுடன் இருப்பதால் எது வந்தாலும் சமாளிப்பீங்க. யாராவது நண்பர்கள் உங்களோட ஆரோக்யத்தைக் கெடுக்கும் பழக்கத்தை அறிமுகப்படுத்த நெனைச்சாங்கன்னா அவங்களை கட் செய்து விலக்கிடுங்க. சாப்பிடும் விஷயங்களில் கேர்ஃபுல்லா இருங்க. ஜீரண பிரச்னை வராம பார்த்துக்குங்கப்பா. இந்த வாரம் நீங்க மனமுவந்து சொல்லும் வார்த்தைகள் பலிக்கும். தன்னம்பிக்கையுடன் செயலாற்றுவீங்க.  சிலர் எதையும் பேசி ஜெயிப்பீங்க. சிலருக்குப் பொன்பொருள் சேர்க்கை உண்டு.

மீனம்

குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் தீரும். கணவன் மனைவி உறவு நல்லபடியாக மாறும். பிரிந்த தம்பதியினர் ஒன்று சேர்வாங்க. வியாபாரிகளுக்கு லாபம் அதிகம் இருக்கும். வருமானத்தில் எந்தவித குறைவும் இருக்காது. சொந்தத்தொழில் செய்பவர்கள் தொழில் விரிவாக்கத்தினை நல்லமுறையில் செய்யலாம். பெண்களுக்கு இது நல்ல வாரம்தான். பிள்ளைகளால் பெருமைப்படுவீங்க. வேலை செய்யும்  இடங்களில் சிக்கல்கள் எதுவும் இருக்காது. வீட்டிலும் உங்கள் பேச்சைக் குடும்பத்தினர் கேட்பார்கள். குடும்பத்தில் சுப காரியங்களை மிகச் சிறப்பாக நடத்துவீங்க.  பணியிடங்களில் மகிழ்ச்சியும் மரியாதையும் நிச்சயம் உண்டு. குறிப்பாக இந்த ராசிப் பெண்களுக்கு யோக வாரம் இது. —       இந்த வாரம் குடும்ப சந்தோஷம் குறைவில்லாது நிறைந்திருக்கும். வீட்டில் திருமண வைபவங்களை எதிர்பார்க்கலாம். தம்பதிகளிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். பெரியவங்க ஆசியால் நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றி அடையும்.