** கொஞ்ச காலமாகவே சில வலதுசாரி ஊடகங்களும், பா. ஜ. க. ஆதரவு ஊடகங்களும் ஒரு திட்டமிட்ட செய்தியைப் பரப்பி வந்தன… அது என்ன?

“தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் மெல்ல மெல்ல ஒன்றிய பா. ஜ. க. மேலிடத்துடன் நெருங்குகிறார்… அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் அக்கட்சியின் அணி சேரப்போகிறார்… ” என்று தொடர்ந்து இப்படிச் செய்திகள் சொல்லப்பட்டன!

ஆனால், அவற்றுக்கு எல்லாம் தி. மு. க. தலைவரும் ஸ்டாலின், கம்யூனிஸ்ட் தலைவர் தா. பாண்டியன் அவர்களின் படத்திறப்பு விழாவில் தக்க பதில் சொல்லி இருக்கிறார்!

” மறைந்த தோழர் தா. பா. அவர்களின் ஆசைப்படி வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் பாசிச பா. ஜ. க.வையும், அடிமை அ. தி. மு. க. வையும் எதிர்க்கும் அணியை உருவாக்குவோம்…” என்று கூறி முதலமைச்சர் ஸ்டாலின் தனது கொள்கை முடிவை அறிவித்திருக்கிறார்!

நிச்சயமாக ஒரு மதச்சார்பற்ற… மத நல்லிணக்கம் கூட்டணியை நமது முதல்வர் ஸ்டாலின் உருவாக்குவது உறுதியாகி இருக்கிறது!

**** இரண்டாவது கார்ட்டூனுக்கு அதிக விளக்கம் தேவையில்லை!

*** ஓவியர் இரா. பாரி.