டில்லி,

காணாமல் போன இந்திய ராணுவ வீரர்கள் 74 பேர் பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டிருக்கலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மாநிலங்களவையில் எழுத்துமூலம் இதனை தெரிவித்த வெளிவிவகாரத்துறை இணை அமைச்சர் விகே சிங், நமக்குக் கிடைத்துள்ள தகவல் அடிப்படையில் காணாமல் போன 74 ராணுவ வீர்கள் பாகிஸ்தான் சிறையில் இருக்கலாம் நம்ப ப்ப டுவதாக குறிப்பிட்டிருக்கிறார்.
ஆனால் இதுதொடர்பாக பாகிஸ்தான் அரசிடம் பலமுறை பேசியும் அவர்களிடமிருந்து தகுந்த பதில் கிடைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2007 ம் ஆண்டு காணாமல் போனவர்களின் உறவினர்கள் பாகிஸ்தான் சிறைக்குச் சென்று தேடியும் பலனில்லை என்று கூறியிருக்கும் அமைச்சர், மத்திய அரசு தொலைந்துபோன ராணுவத்தினரை கண்டுபிடிக்க தொடர் முயற்சியில் ஈடுபடும் என்றும் தெரிவித்துள்ளார்.