டோக்கியோ ஒலிம்பிக்கில் 50% பார்வையாளர்களுக்கு அனுமதி

Must read

டோக்கியோ

டைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் 50% பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி என அறிவிக்கப்பட்டுள்ளது.

உலக விளையாட்டு திருவிழா என அழைக்கப்படும் ஒலிம்பிக் போட்டிகள் கடந்த ஆண்டு ஜப்பான் நாட்டின் தலைநகர் டோக்கியோவில் நடைபெறுவதாக இருந்தது.   ஆனால் கொரோனா தொற்று காரணமாக அது தொடர்ந்து தள்ளி வைக்கப்பட்டது.  அதன்பிறகு ஜப்பானில் ஒலிம்பிக் நடக்குமா என்பதே சந்தேகமாக இருந்தது.

இதையொட்டி ஒலிம்பிக் போட்டிகளை வேறு ஏதாவது நாட்டில் நடத்தலாம் என ஒரு சிலர் கூறி வந்தனர்.    ஒரு சில நாடுகளும் தங்கள் நாட்டில் ஒலிம்பிக் போட்டி நடத்த முன் வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.   இந்நிலையில் ஜப்பானில் இந்த வருடம் ஒலிம்பிக் போட்டிகள் மற்றும் ஊனமுற்றோர் ஒலிம்பிக் போட்டிகள் ஆகியவை நடப்பது உறுதி செய்யப்பட்டது.

கொரோனா பாதிப்பை முன்னிட்டு பார்வையாளர்கள் வருகை குறையலாம் என அச்சம் எழுந்ததால் பார்வையாளர்கள் இல்லாமல் போட்டிகள் நடைபெறலாம் என யோசனை தெரிவிக்கப்பட்டது.  இந்நிலையில் டோக்கியோ ஒலிம்பிக் அமைப்புக் குழு அரங்கத்தில் உள்ள இருக்கைகளில் 50% பார்வைவாயளர்களை அனுமதிக்க உள்ளதாக அறிவித்துள்ளது. 

மேலும் அனைத்து அரங்குகளிலும் அதிகபட்சமாக 10,000 பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட உள்ளனர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.   மேலும் ஊனமுற்றோர் ஒலிம்பிக் போட்டிகள் பார்வையாளர்கள் எண்ணிக்கை குறித்து ஜூலை 16 ஆம் தேதிக்குள் முடிவெடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

More articles

Latest article