டில்லி

பிரபல கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தாம் பலமுறை சொதப்பி உள்ளதாக ஒப்புக் கொண்டுள்ளார்.

பிரபல இந்திய கிரிக்கெட் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் டெஸ்ட் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் ஆவர்.  இவர் பல இடது கை பேட்ஸ்மேன்களை கதி கலங்க வைத்துள்ளார்.  இதுவரை இவர் 79 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 24.68 சராசரி ரன்களை எடுத்து 410 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார்.  இதில் 208 விக்கட்டுகள் இடதுகை பேட்ஸ்மேன்களுடையது அகும்.

இவர் 30 முறை 5 விக்கட்டுகளையும் 7 முறை 10 விக்கட்டுகளையும் வீழ்த்தி தற்போதைய ஸ்பின்னர்கள் இடையே சாதனை புரிந்துள்ளார்.  சமீபத்தில் இவர் ஒரு பேட்டி ஒன்றை  அளித்துள்ளார்.  அவர் அப்போது, “கிரிக்கெட் வீரர்கள் எப்போதுமே சிறப்பாக செயல்பட முடியாது என்பதே உண்மையாகும்.   எல்லா வீரர்களுக்கும் சில வேளைகளில் சொதப்பும் நிலை உண்டாகும்.

அவ்வகையில் நான் பலமுறை சொதப்பி இருக்கிறேன்.  அந்த நேரத்தில் பலர் என்னை கடுமையாக விமர்சிப்பார்கள்,  நான் அதை கண்டு கொள்ள மாட்டேன்.  என்னை பொறுத்த வரையில் நான் எப்போதும் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்க வேண்டும் என விரும்பும் சாதாரண மனிதன்.  எனது போட்டியை நான் மேம்படுத்த தவரும் போது ஓய்வை அறிவிப்பேன்.  இப்போது நான் சிறப்பாக விளையாடுவதல் ஓய்வு பற்றி யோசிக்க வில்லை” என தெரிவித்துள்ளார்.