வுதாம்ப்டன், இக்கிலாந்து

நேற்று நடந்த மூன்றாம் நாள் உலக டெஸ்ட் சாம்பியனஷிப் இறுதிப் போட்டி மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் நியூசிலாந்து 101/2 ஸ்கோர் கணக்கில் இருந்தது.

இங்கிலாந்து நாட்டின் சவுதாம்ப்டன் நகரில் உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி போட்டி நடந்து வருகிறது.  நேற்று மூன்றாம் நாள் ஆட்டத்தின் தொடக்கத்தில் இந்தியா 3 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் எடுத்து ஆட்டத்தைத் தொடங்கியது.

நேற்றைய போட்டியின் 3 ஆம் ஓவரில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி ஆட்டம் இழந்தார். ஜேமிசன் பந்து வீச்சில் அவர் அவுட் ஆனபோது 44 ரன்கல் எடுத்திருந்தார்.   இந்திய அணியின் துணை கேப்டன் ரஹேனா சதம் அடிப்பார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர்.  ஆனால் அவர் 49 ரன்களில் ஆட்டம் இழந்தார்.

அதன் பிறகு விளையாடிய வீரர்களில் அஸ்வின் மட்டுமே அதிகபட்சமாக 22 ரன்கள் எடுத்தார். மீதமுள்ள வீரர்கள் மிகச் சொற்ப ரன்களில் அவுட் ஆனதால் இந்திய அணி 217 ரன்களுக்கு அனைத்து விக்கட்டுகளையும் இழந்தது.   நியூசிலாந்து அணியின் ஜேமிசன் 5 விக்கெட்டுகள்.  போல்ட் லேக்னர் ஆகியோர் தலா 2 விக்கட்டுகளை வீழ்த்தினர்.

இதைத் தொடர்ந்து நியூசிலாந்து அணி முடஹ்ல் இன்னிங்க்சை தொடங்கியது.  தொடக்க ஆட்டக்காரரக்ளான லாதம் மற்றும் கான்வே இருவருமே நிதானமாக விளையாடினர்.  லாதமை அவர் 30 ரன்கள் எடுத்த போது அஸ்வின் அவுட் ஆக்கினார். கான்வே தனது 54 ஆம் ரன் எடுத்த போது அவுட் ஆனார். தொடர்ந்து நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்ஸ் 12 ரன்களுடனும் ரோஸ் டெய்லர் கணக்கைத் தொடங்காத நிலையிலும் ஆட்டம் முடிந்தது. 

வெளிச்சம் இன்மை காரணமாக முன்னதாகவே ஆட்டம் நிறுத்தப்பட்டுள்ளது.  அப்போது நியுசிலாந்து அணி 2 விக்கட் இழப்புக்கு 101 ரன்கள் எடுத்திருந்தது.