ஜெனிவா: புதிய வகை பிறழ்வு கொரோனா வைரசான ஒமிக்ரான் உலகின் 23 நாடுகளில் பரவி உள்ளது, இது மேலும் பல நாடுகளுக்கு பரவும் வாய்ப்பு இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்து உள்ளது.
கடந்த இரு ஆண்டுகளாக உலக நாடுகளை பயமுறுத்தி வரும் கொரோனா வைரஸ், தற்போது உருமாறி, அதிதீவிர தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் பரவத்தொடங்கி உள்ளது. தொற்று பரவலை தடுக்கும் வகையில் 2 டோஸ் தடுப்பூசி போட்டவர்களையும் தாக்கும் இந்த ஒமிக்ரான் வைரஸ் டெல்டா. டெல்டா பிளஸ் வைரசை விடவும் பல மடங்கு வீரியம் மிக்கது என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர். ஆனால், இந்த வைரஸ் தொற்றுக்கு இதுவரை ஒமிக்ரானால் ஒருவரும் உயிரிழக்கவில்லை என்பது சற்று ஆறுதல் அளித்துள்ளது.
‘ஓமிக்ரான்’ கொரோனா பாதிப்பில் இருந்து தப்பிக்கும் வழிகள்….
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய உலக சுகாதார அமைப்வின் தலைவர் அதானோம், தென் ஆப்பிரிக்காவில் இருந்து பரவிய ஒமிக்ரான் 23 நாடுகளுக்கு பரவி உள்ளது என்பதை உறுதி செய்துள்ளதுடன், “WHO இந்த வளர்ச்சியை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறது, ஒவ்வொரு நாடும் அப்படித்தான்” என்று அவர் மேலும் கூறினார். பொதுமக்கள் முக்கவசம் அணிந்து எச்சரிக்கையாக இருப்பது அவசியம் என்றும் வலியுறுத்தி உள்ளார்.
இந்தியாவில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.மும்பை டெல்லி போன்ற நகரங்களுக்கு வரும் வெளி நாட்டவர்கள் குறிப்பாக பாதிப்பு அதிகம் உள்ள நாடுகளில் இருந்து வந்தவர்களிடம் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இதில் 6 பேர் கொரோனா பாஸிட்டிவ் என்று கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் அது ஒமிக்ரான் வகையா என்பது முடிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.