டெல்லி: உலக நாடுகளை மீண்டும் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கி உள்ள  ‘ஓமிக்ரான்’ எனும் உருமாறிய கொரோனா பாதிப்பில் இருந்து பொதுமக்கள் தம்பித்துக்கொள்ள  கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து கடைபிடியுங்கள்  என உலக சுகாதார நிறுவனம் மற்றும் இந்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

தென்னாப்பிரிக்காவில் இருந்து பரவத்தொடங்கிய வீரியமிக்க வைரஸ்  ஒமிக்ரான் வைரஸ் தற்போது வரை 18 நாடுகளில் பரவி உள்ளது. இத னால், உலக நாடுகள் மீண்டும் கண்காணிப்பை தீவிரப்படுத்தி இருப்பதுடன், பொதுமுடக்கத்தையும் அறிவித்து வருகின்றன.

இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு  உடல் சோர்வு, லேசான தசை வலி, தொண்டை அரிப்பு, வறட்டு இருமல் மற்றும் லேசான காய்ச்சல் அறிகுறிகள் தென்படும் என தென்னாப்பிரிக்க மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர். மேலும்,  பாதிக்கப்பட்ட நோயாளிகள் ஒரு சில நாட்களுக்குள் குணமடைந்து விடுவர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டியதில்லை என்று கூறப்படுகிறது.

இந்த வைரஸ் இன்னும் இந்தியாவில் பரவாத நிலையில், 3வது அலையாக பரவ வாய்ப்பு இருப்பதாகவும் சந்தேகிக்கப்படுகிறது. இதனால் நாடு முழுவதும் மீண்டும் தீவிர கண்காணிப்பை ஏற்படுத்தி மத்தியஅரசு அறிவுறுத்தி உள்ளது.

இந்திய பிரதமர் மோடியும், தொற்று ரவல் தடுக்கும் வகையில்,  அதிக கொரோனா பரவல் ஏற்படும் இடங்களை கட்டுப்படுத்த பகுதியாக தொடர வேண்டும். தீவிர கட்டுப்பாடு, கண்காணிப்பு தொடர வேண்டும். முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி போன்ற சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மக்கள் பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

இந்த வைரஸ் தொற்று பாதிப்பில் இருந்து ஒவ்வொருவரும் தங்களை பாதுகாத்துக்கொள்ள  கீழ்வரும் அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டியது அவசியம்.

முகக்கவசம் அணியவும்

தனிமனித இடைவெளி கடைபிடிக்கவும்

தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் உடனே போட்டுக்கொள்ளவும்.

கூட்டமாக இருக்கும் இடங்களுக்கு செல்வதை தவிர்க்கவும்

இதன்மூலம் ஒருவர் தங்களை மட்டுமல்லாது தங்களது குடும்பத்தினரையும் பாதுகாத்துக்கொள்ள முடியும்…

விழிப்புடன் இருங்கள் மக்களே…

உலக நாடுகளில் பரவும் ‘ஒமிக்ரான்’ வைரஸ், இந்தியாவில் இன்னும் ஊடுருவவில்லை! கோவிட் தரவு ஆய்வாளரான விஜயானந்த் தகவல்…