டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் மேலும் 8,954 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளதுடன் 267 பேர் உயிரிழந்துள்ளனர், 10207 பேர் குணமடைந்து உள்ளனர்.

மத்திய சுகாதாரத்துறை இன்று காலை 8 மணி வரையிலான கொரோனா நிலவரம் குறித்து வெளியிட்டுள்ள தகவலின்படி, நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில்  புதிதாக 8,954  பேர் பாதித்துள்ளனர். இதனால், பாதிக்கப்பட்டோர் மொத்த  எண்ணிக்கை 3,45,96,776 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று மேலும் 267 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பலியானோர் மொத்த  எண்ணிக்கை  4,69,247 ஆக உயர்ந்திருக்கிறது. உயிரிழந்தோர் விகிதம் 1.36% ஆக குறைந்துள்ளது.

கடந்த 24மணி நேரத்தில் தொற்று பாதிப்பில் 10,207 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 3,40,28,506 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் விகிதம் 98.36% ஆக உயர்ந்துள்ளது

தற்போது நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 99,023 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.29% ஆக குறைந்துள்ளது.

இந்தியாவில் இதுவரை 1,24,10,86,850 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 80,98,716 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் இதுவரை 64,24,12,315*  சோதனைகள் செய்யப்பட்டு உள்ளன. நேற்று 11,08,467 மட்டும் சோதனைகள் நடத்தப்பட்டு உள்ளது.