லக நாடுகளில் பரவும் ‘ஒமிக்ரான்’ வைரஸ், 18 நாடுகளில் பரவியுள்ள நிலையில், இந்தியாவில் இன்னும் ஊடுருவவில்லை என்பது கோவிட் தரவு ஆய்வாளரான விஜயானந்த்  வெளியிட்டு உள்ள தகவலில் தெரியவந்துள்ளது. விஜயானந்த் இன்று காலை இந்த தரவுகளை மேற்கோள் காட்டி பதிவிட்டு உள்ளார்.

கொரோனா தொற்றின் புதிய பிறழ்வு வைரசான B.1.1.529  ஒமிக்ரான் என்று அழைக்கப்படுகிறது. இந்த புதிய வகை கொரோனா வைரஸ் தென் ஆப்பிரிக்காவில் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. டெல்டா பிளஸ் தொற்றை விட தீவிரமானது என்றும் 10 பிறழ்வுகளை கொண்டது என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர். கொரோனா தடுப்பூசி இரண்டு டோஸ்  செலுத்திக் கொண்டவர்களையும் கூட இந்த புதிய வைரஸ் தாக்குவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் உலக நாடுகள் அதிர்ச்சி அடைந்துள்ளன. பல நாடுகளில் மீண்டும் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இந்தியாவிலும் ஒமிக்ரான் வைரஸ் இதுவரை பரவவில்லை என்று தெரிவித்துள்ள மத்தியஅரசு, கொரோனா கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தும்படி மாநிலங்களுக்கு அறிவுறுத்தி உள்ளது.

இந்த நிலையில், புதிய பிறழ்வு தொற்றான ஒமிக்ரான் கொரோனா வைரஸ் பரவல் குறித்து பிரபல கோவிட் தரவு ஆய்வாளரான விஜயானந்த் (Vijayanand – Covid Data Analyst) தனது டிவிட்டர் பக்கத்தில் ஒமிக்ரான் தாக்கத்துக்குள்ளான நாடுகள் குறித்த பட்டியல் மற்றும் தகவல்களை வெளியிட்டு உள்ளார்.

தென்னாப்பிரிக்காவில் இருந்து பரவத் தொடங்கிய ஒமிக்ரான், அந்நாட்டில் தீவிரமாக பரவி வருகிறது.  இந்த வைரஸ் தொற்று பாதிப்பு காரணமாக,  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆரம்ப தரவு கடந்த வாரத்தில் 72% அதிகரித்துள்ளது. அதே வேளையில்,  2 வாரங்களுக்கு முந்தையதை ஒப்பிடும்போது, இறப்பு அதிகரிக்கவில்லை என்பது ஆறுதலை அளித்துள்ளது.

அதன்படி, தென்னாப்பிரிக்காவில்  கடந்த வாரம் – 884 பேர் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், இது கடந்த  2 வாரங்களுக்கு முன்பு  515 ஆக இருந்தது என்றும் தெரிவித்து உள்ளார்.

தற்போது இந்த வைரஸ் உலகெங்கிலும் உள்ள 18 நாடுகளில் பரவி உள்ளது.  Omicron மாறுபாட்டின் உறுதிப்படுத்தப்பட்ட வழக்குகள்  மொத்தம் 215 பதிவாகி உள்ளன. மேலும் 1,224 வழக்குகள் சந்தேகிக்கப்படுகின்றன. இ

ந்த வைரஸ் தற்போது வரை (டிசம்பர் 01ந்தேதி காலை 11மணி) இந்தியாவில் பரவவில்லை என்பதும் தெரிய வந்துள்ளது. ஒமிக்ரான் தாக்கம் ஏற்பட்டுள்ள பட்டியலில் இந்தியா இடம்பெறம் வில்லை என்பது மகிழ்ச்சிக்குரியது.

இந்த கொரோனா வைரஸ் மாறுபாடு, ஆய்வாளர்கள் அச்சுறுத்துவது போல, முந்தையதை பிறழ்வு வைரஸ் போல தீவிரமானதாக இல்லை என்பதும் தரவுகளின் மூலம் தெரிய வந்துள்ளது.  இதற்கு காரணம் தடுப்பூசி, முகக்கவசம், சமூக இடைவெளி காரணமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

புதிய வகையிலான B.1.1.529 கொரோனா வைரஸ் பெயர் ‘ஒமிக்ரான்’ ! உலக சுகாதார நிறுவனம்…