பிரதம மந்திரி பசல் பீமா யோஜனா (PMFBY) பயிர் காப்பீட்டு திட்டத்தில் கடந்த மூன்றாண்டுகளில் 66,460 கோடி ரூபாய்க்கு இழப்பீடு கோரப்பட்டுள்ளது.

இதில், 3372.72 கோடி ரூபாய்க்கான இழப்பீடு கோரிக்கை நிறைவேற்றப்படாமல் நிலுவையில் உள்ளதாக மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் பாராளுமன்றத்தில் பதிலளித்துள்ளார்.

விவசாயிகளுக்கு ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும் இந்த திட்டத்தில், வங்கி கணக்கில் செலுத்துவதில் கோளாறு உள்ளதால் பெரும்பாலான தொகை நிலுவையில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

2020 – 21 ம் நிதியாண்டில் மட்டும் 1087.35 கோடி ரூபாய் நிலுவையில் உள்ளதாக கூறிய அவர் இதில் பெரும்பாலும் ஜார்கண்ட், தெலுங்கானா, கர்நாடக மற்றும் மகாராஷ்டிரா மாநில விவசாயிகளே அடங்குவர் என்று கூறியுள்ளார்.