ரியோ டி ஜெனிரோ:
ரியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் பேட்மின்டனில் இந்தியாவின் ஸ்ரீகாந்த், பி.வி.சிந்து ஆகியோர் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.
sidh
மகளிர் பிரிவு காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, தைவான் வீராங்கனையை 21-13, 21-15 என்ற நேர்செட்களில் வெற்றி பெற்றார்.
பிவிசிந்து காலிறுதியில் சீன வீராங்கனை யிஹான் வாங்கை எதிர்த்து விளையாடுவார். இந்த சுற்று மிகவும் கடினமானது என கூறப்படுகிறது.
ஆடவர் பிரிவு பேட்மின்டனில்  காலிறுதிக்கு முந்தைய சுற்றில் டென்மார்க் வீரர் ஜான் ஓ ஜோர்ஜென்ஸனை எதிர்த்து ஸ்ரீகாந்த் விளையாடினார். இந்தப்போட்டியில் ஸ்ரீகாந்த் 21-19, 21-19 என்ற நேர்செட்களில் வெற்றி பெற்றார். உலக தரவரிசையில் அவர் 11வது இடத்தில்  ஸ்ரீகாந்த் உள்ளது குறிப்பிடத்தக்கது. விறுவிறுப்பான இந்தப் போட்டி 42  நிமிடத்தில் முடிவுக்கு வந்தது.
srikandth
இதனால் ஸ்ரீகாந்த்  காலிறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். கால் இறுதியில் சீனாவின் நட்சத்திர வீரர் லின் டான் சவாலை ஸ்ரீகாந்த் எதிர்கொள்கிறார்.
. 2008 பெய்ஜிங், 2012 லண்டன் ஒலிம்பிக்  போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்றுள்ள லின் டான், 5 முறை ஒற்றையர் பிரிவில் உலக சாம்பியன் பட்டம் வென்றவர்  ஸ்ரீகாந்த்.