நெல்லை

யிலில் கைப்பற்றப்பட்ட  ரு 4 கோடிக்கும் தமக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் கூறி உள்ளார். 

அரசியல் கட்சியைச் சேர்ந்த சிலர் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் தேர்தல் செலவிற்கான பணம் கொண்டு செல்வதாகத் தேர்தல் பறக்கும் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.  எனவே நேற்று இரவு 8.35 மணியளவில் எழும்பூரில் இருந்து தாம்பரத்திற்கு ரயில் வந்தபோது அதில் ஏறிய தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

சோதனையில் 3 பயணிகள் சூட்கேஸ்களில் கட்டுக்கட்டாகப் பணம் வைத்திருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.  அந்த 3 பேரையும் உடனடியாகப் பணத்துடன் தாம்பரம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். பணத்தை எண்ணியபோது அதில் 3 கோடியே 99 லட்ச ரூபாய் இருந்தது தெரியவந்தது. அவர்கள் 3 பேரையும் கைது செய்த காவல்துறையினர் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது பணத்துடன் பிடிபட்டது நெல்லை பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் நெருங்கிய உறவினர் உள்பட 3 பேர் என்பது தெரியவந்ததால் தீவிர விசாரணை நடந்து வருகிறது.  பறிமுதல் செய்யப்பட்ட பணத்திற்கும் தமக்கும் தொடர்பு இல்லை என பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

நயினார் நாகேந்திரன்,

“எனக்கும் தாம்பரம் ரயில் நிலையத்தில் பிடிக்கப்பட்ட 4 கோடி ரூபாய்க்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. யார் புகார் கொடுத்தாலும் எனக்குக் கவலை இல்லை. பணம் எனக்குத் தொடர்புடைய இடத்தில் கைப்பற்றப்படவில்லை. சிலர் என் பெயரைக் களங்கப்படுத்த வேண்டும் என்று இப்படி செய்கின்றனர். அவர்கள் எனக்கு நெருக்கடி கொடுக்க என்னை டார்கெட் செய்கின்றனர். இது மக்களைத் திசைதிருப்பத் திமுகவினர் செய்த வேலை ” 

என்று தெரிவித்துள்ளார்.