ஆமதாபாத்: தடுப்பூசி எடுத்துக்கொள்ளாதவர்கள் பொதுஇடங்களுக்கு வர தடை விதித்துள்ளது குஜராத் அரசு. இந்த தடை உத்தரவு இன்றுமுதல் அமலுக்கு வந்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் இருந்தாலும் தினசரி பாதிப்பு 30ஆயிரம் முதல் 35ஆயிரம் வரை ஏறி இறங்கி காணப்படுகிறது. நாட்டின் ஒட்டுமொத்த பாதிப்பில் 70சதவிகிதம் கேரள மாநிலத்தில் பதிவாகி வருகிறது. ஆனால், அம்மாநில அரசு, தளர்வுகளை வெகுவாக தளர்த்தி, அனைத்து பயன்பாடுகளையும் திறந்து விட்டுள்ளது. கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இதுவரை 80 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது.

குஜராத் மாநிலத்தில் தொற்று பரவல் குறைந்து வந்தால், அங்கு ஏராளமான தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தளர்வுகள் காரணமாக மக்கள் கொரோனா நெறிமுறைகளை கடைபிடிக்காமல் ஊர் சுற்றி வருகின்றனர். இதை தடுக்கும் பொருட்டு,  தடுப்பூசி போடாதவர்கள் பொதுஇடங்களில் கூடவோ, பொதுநிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளவோ தடை விதித்து மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது.

அதைத்தொடர்ந்து மாநில தலைநகரான ஆகமாதாபாத்தில், கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ளாதவர்களுக்கு பொது இடங்களில் அனுமதி இல்லை என்று மாநகராட்சி ஆணையர்  ஜிக்னேஷ் படேல் அதிரடியாக அறிவித்து உள்ளார். கொரோனா தொற்றுநோய்க்கு எதிரான ஒரே ஆயுதம் தடுப்பூசி/ இதுவரை தடுப்பூசி எடுத்துக்கொள்ளாதவர்கள் உடனே தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும்.

18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழை எப்போதும் கையில் வைத்திருக்க வேண்டும். இதை அதிகாரிகள் ஆய்வு செய்வார்கள்

தடுப்பூசி போடாதவர்களுக்கு பேருந்துகள், நூலகங்கள், உடற்பயிற்சிக்கூடம், விளையாட்டு வளாகங்கள், நீச்சல் குளங்கள், கன்காரியா ஏரி முகப்பு, ஆற்றங்கரை உள்ளிட்ட இடங்களில் அனுமதியில்லை. தடுப்பூசி போடப்படாதவர்கள் பூங்காக்கள் மற்றும் தோட்டங்களுக்குள் நுழைய தடை . முதல் தவணை தடுப்பூசி எடுத்துக் கொண்டு இரண்டாவது தவணை தடுப்பூசிக்காக காத்திருந்தாலும் அவர்கள் போக்குவரத்து சேவை மற்றும் கட்டிடங்களில் நுழைய அனுமதியில்லை.

மாநகராட்சியின் இந்த அதிரடி முடிவுக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.