சென்னை:
ல்லிக்கட்டு, எருது விடுதல் உள்ளிட்ட போட்டிகளுக்கு எந்த தடையும் விதிக்கவில்லை என தமிழ்நாடு காவல்துறை விளக்கமளித்துள்ளது.

ஜல்லிக்கட்டு, எருது விடுதல் உள்ளிட்ட போட்டிகளுக்கு தடை விதித்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியதை அடுத்து, எவ்வித விளையாட்டுக்கும் தடை விதித்து சுற்றறிக்கை அனுப்பவில்லை என தமிழ்நாடு காவல்துறை கூறியுள்ளது.
தவறான தகவலை பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.