புதுச்சேரி:
ட்டுநர் உரிமம் இன்றி சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோருக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று புதுச்சேரி அரசு அறிவித்திருக்கிறது.

18 வயதுக்கு குறைவானவர்கள் வாகனம் ஓட்டினால் அவர்களின் பெற்றோருக்கு அபராதம் விதிக்கப்படும் என்று தமிழக போக்குவரத்து காவல்துறையினர் எச்சரித்துள்ளது.

தற்போது புதுச்சேரி அரசும் அதிரடியான அறிவிப்பை இன்று வெளியிட்டு இருக்கிறது. அதன்படி, ஓட்டுநர் உரிமம் இன்றி சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோருக்கு 3 ஆண்டு வரை சிறைத்தண்டனையும், 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.