சென்னை : கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் அற்ற 9 மண்டலங்கள்

Must read

சென்னை

ற்போது சென்னை நகரில் 9 மண்டலங்களில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் இல்லை என மாநகராட்சி தெரிவித்துள்ளது.

கொரோனா பாதிப்பு சென்னை நகரில் முன்பைவிட  சற்று குறைந்து காணப்படுகிறது.   ஆயினும் தினசரி பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து ஆயிரத்தை தாண்டி வருகிறது.   நேற்று சென்னையில் 1331  பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 93,537 பேர் பாதிக்கப்படு சுமார் 1986 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதுவரை 77,625 பேர் குணம் அடைந்து இன்னும் 13,926 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னை நகரம் 15 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.  இங்கு கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள இடங்கள் மாநகராட்சியால் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு சீல் வைக்கப்படுகிறது.  சீல் வைக்கப்பட்ட பகுதிகளில் 14 நாட்கள் வரை புதிய பாதிப்புக்கள் ஏற்படவில்லை எனில் சீல் அகற்றப்படுகிறது.

இது குறித்து மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 9 மண்டலங்களில் தற்போது கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.  அவை திருவொற்றியூர், மணலி, மாதவரம்,  தண்டையார்பேட்டை, ராயபுரம், ஆலந்தூர், அடையாறு, சோழிங்கநல்லூர், பெருங்குடி ஆகிய மண்டலங்கள் ஆகும்.

மீதமுள்ள 6 மண்டலங்களில் 62 பகுதிகள் சீல் வைக்கப்பட்டுள்ளன.  இவை அண்ணாநகர் மண்டலத்தில் 22 பகுதிகள், கோடம்பாக்கம் மண்டலத்தில் 17 பகுதிகள் அம்பத்தூர் மண்டலத்தில் 12 பகுதிகள்,  திரு விக நகர் மண்டலத்தில் 7 பகுதிகள், தேனாம்பேட்டை மண்டலத்தில் 3 பகுதிகள், வளசரவாக்கம் மண்டலத்தில் 1 பகுதி ஆகும்.”  எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More articles

Latest article