திருவனந்தபுரம்

னியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கு வசூலிக்க வேண்டிய கட்டணங்கள்  குறித்த வழிமுறைகளைக் கேரள அரசு வெளியிட்டுள்ளது.

கொரோனா தொற்று கட்டுக்கு மீறி பரவி வருவதால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க அரசு மருத்துவமனைகள் போதுமான அளவில் இல்லை.   எனவே பலரும் சிகிச்சைக்காகத் தனியார் மருத்துவமனைகளை நாட வேண்டிய நிலை உள்ளது.  ஒரு சில தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக் கட்டணம் அதிக அளவில் வசூலிப்பதாகப் புகார்கள் வருவதால் ஒவ்வொரு மாநிலமும் சிகிச்சைக் கட்டண வழிமுறைகளை அறிவித்து வருகின்றன.

அவ்வகையில் கேரள மாநில சுகதர்துரை அமைச்சர் கேகே ஷைலஜா இது குறித்து நேற்று வெளியிட்ட அறிவிப்பில் “மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனா சிகிச்சை கடடனம் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும்.  எனவே இதற்கான வழிமுறைகளை அரசு அறிவிக்கிறது.  இது கேரள அரசின் காருண்யா ஆராக்கிய சுரக்‌ஷா பதாதி காப்பிட்டுத் திட்டத்தின் கீழ் வரும் மருத்துவமனைகளுக்கும் பொருந்தும்.

ஜென்ரல் வார்டுகளுக்கான கட்டணம் தினசரி ரூ.2300, உயர் சார்பு வார்டுகளுக்கு தினசரி ரூ.3300,  திவிர சிகிச்சைப் பிரிவுக்கு தினசரி  ரூ.6500, வெண்டிலேட்டருக்கு தினசரி ரூ.11500 என நிர்ணயம் செய்யப்படுகிறது. அத்துடன் நோயாளிகளிடம் இருந்து பிபிஇ உடைகளுக்கான கட்டணத்தை வசூல் செய்ய அனுமதி உண்டு.

நோயாளிகள் தங்கள் வசதிக்கு ஏற்றார்போல் அரசு அல்லது தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம்.    காப்பிட்டு வசதி உள்ளவர்கள், அரசு மருத்துவர்களால் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டோர் ஆகியோரது சிகிச்சைக் கட்டணங்களை அரசு ஏற்றுக் கொள்ளும்.  அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் ஒன்றிணைந்து கொரோனாவை எதிர்த்துப் போரிட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.