பாட்னா

க்களவை தேர்தல் முன்கூட்டியே நடத்தப்பட வாய்ப்புள்ளதாக பீகார் முதல்வர் நிதிஷ்குமார் கூறி உள்ளார்.

நடைபெற  உள்ள தேர்தலில், மத்தியில் ஆளும் பா.ஜ.க.வுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஓரணியில் கொண்டு வந்து, ஒரே வேட்பாளரை நிறுத்தும் முயற்சியில் பீகார் முதல்-மந்திரியும், ஐக்கிய ஜனதாதளம் தலைவருமான நிதிஷ்குமார் முழுவீச்சில் இறங்கி உள்ளார்.  இது குறித்து அவர் எதிர்க்கட்சி தலைவர்களைத் தொடர்ந்து சந்தித்துப் பேசி வருகிறார்.

 வரும் 23 அன்று  பீகார் தலைநகர் பாட்னாவில் எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டத்தை அவர்  கூட்டி உள்ளார்.  இதில் காங்கிரஸ் தலைவர்கள் கார்கே, ராகுல் காந்தி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மராட்டிய முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே, உ.பி. முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்ளிட்டோர் கலந்து கொள்வார்கள் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

நேற்று பாட்னாவில் நிதிஷ்குமார் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்.

அவர் தனது பேட்டி யில் ,

“ஒரு நிகழ்ச்சியில் நான் பேசுகையில் மக்களவைக்கு முன்கூட்டியே கூட தேர்தல் வரலாம் எனக் கூறியது பற்றிக் கேட்கிறீர்கள். எப்போதுமே மத்திய பா.ஜ.க. அரசுக்கு இந்த விருப்பம் இருக்கிறது.  கடந்த 2004-ம் ஆண்டு, அப்போது பிரதமராக இருந்த வாஜ்பாய்க்கு ஆதரவாக இல்லாதபோதும்கூட, முன்கூட்டியே தேர்தல் நடத்தப்பட்டது.

அப்போது நான் மக்களவைக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்தப்படலாம் என வேடிக்கையாகத்தான் கூறினேன்.. தற்போதைய நிலையில், எதிர்க்கட்சிகள் கூட்டணி வலுப்பெற்றுவிட்டால் என்னாவது? என்னும் எண்ணத்தில் பாஜகவினர் முன்கூட்டியே தேர்தல் நடத்தலாம்.”

எனக் கூறினார்.