பணியில் இருக்கும் பழைய ஊழியர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளைப் போன்று புதிய ஊழியர்களும் எதிர்பார்ப்பதை அடுத்து அனைத்து ஊழியர்களுக்கும் ஒரே மாதிரியான நடத்தை விதிகளை பின்பற்ற டிசிஎஸ் நிறுவனம் முடிவெடுத்தது.

தற்போது டிசிஎஸ் போன்று இன்போசிஸ் நிறுவனமும் அலுவலகத்திற்கு வராத ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்துள்ளது.

கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக லேப்டாப், டேபிள், சேர் தவிர இதரப்படிகளை ஊழியர்களுக்கு வழங்கி அவர்களை வீட்டில் இருந்தபடி வேலை செய்ய உத்தரவிட்ட நிறுவனங்கள். பின்னர் கட்டுப்பாடுகள் தளர்ந்த பின் ஹைஃபிரிட் எனும் வாரத்தில் இரண்டு நாள் அலுவலகம் வந்து வேலை செய்ய உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து புதிதாக பணியில் சேர்ந்த ஊழியர்களை அலுவலகத்திற்கு வந்து வேலை செய்ய உத்தரவிட்டது. தவிர முக்கிய காரணம் இருப்பின் வீட்டில் இருந்து வேலை செய்ய அனுமதி வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தன.

ஆனால் அலுவலகத்தில் பழைய ஊழியர்கள் வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே வருவதைப் பார்த்த புதிய ஊழியர்களும் ஏதாவது காரணத்தைக் கூறி வீட்டில் இருந்து வேலை பார்ப்பது அதிகரித்து வந்தது.

இதனால் ஊழியர்கள் அனைவரையும் அலுவலகம் வர நடவடிக்கை எடுத்த டிசிஎஸ் நிறுவனம் அலுவலகம் வராத ஊழியர்களின் விடுப்பு நாட்கள் மற்றும் சம்பளத்தில் பிடித்தம் போன்றவற்றை அறிவித்தது.

இந்த நிலையில் இன்போசிஸ் நிறுவனமும் தற்போது இதேபோன்ற நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்துள்ளது.

அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகளில் பணிபுரியும் தனது ஊழியர்கள் 30000 பேருக்கு புதிதாக திருத்தியமைக்கப்பட்ட நடத்தை விதிகள் குறித்த சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது.

டிசிஎஸ் மற்றும் இன்போசிஸ் நிறுவனங்களைத் தொடர்ந்து மற்ற நிறுவனங்களும் இதேபோன்ற ஒரே மாதிரியான நடவடிக்கையில் இறங்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுவதால் இனி அனைத்து ஐடி ஊழியர்களும் மீண்டும் அலுவலகம் செல்ல தயாராகியுள்ள நிலையில் நிறுவனங்களும் அதற்கான முன்னேற்பாட்டில் இறங்கியுள்ளன.