சென்னை: நீட் தேர்வில் ஆள்மாறாட்டம்  செய்த வழக்கில், ஆள் மாறாட்டம் செய்ய ரூ. 7 லட்சம் பேரம் பேசியதாகக் கைது செய்யப்பட்ட மாணவர் வாக்குமூலம் அளித்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவில் மருத்துவம் பயில நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி மருத்துவம் படிக்க விரும்பும் மாணவ-மாணவிகளுக்கு ஆண்டுதோறும் தேசிய தேர்வு முகமை சார்பில் நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வை எதிர்கொள்ள முடியாத பல பணக்காரர்கள், ஆள்மாறாட்டம் செய்து மருத்துவ படிப்பில் சேர்ந்ததாக குற்றச்சாட்டு எழுந்ததது. இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த குற்றத்தில், 4 மாணவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். இதில்,  கைது செய்யப்பட்ட மாணவர் நரேஷ் பிஷ்னோய் என்ற மாணவர்  ஆள்மாறாட்டம் செய்ய ரூ. 7 லட்சம் பேரம் பேசியதாகக்  வாக்குமூலம் கொடுத்துள்ளார். மேலும்  இவ்வழக்கு தொடர்பாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் படிக்கும் மாணவர் ஒருவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

நீட் தேர்வு ஆள்மாறாட்டம்  மோசடி டெல்லி மட்டுமின்றி நாடு முழுவதும் நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது.  கைதானவர்களிடம் இருந்து லேப்டாப், செல்போன் கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதற்கட்டமாக இந்த கும்பல் எத்தனை பேருக்கு பதில் ஆள்மாறாட்டம் செய்தது. இவர்களுடன் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என்பது தொடர்பாக தீவிர விசாரணை நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.