சென்னை: நீட் தேர்வு பயம் காரணமாக ஏற்கனவே சில மாணாக்கர்கள் தற்கொலையை நாடியுள்ள நிலையில், இன்று  மேலும் ஒரு மாணவர் தற்கொலை செய்துள்ளார். நீட் தேர்வு விரைவில் வெளியாக உள்ள நிலையில்,  கோவையை சேர்ந்த கீர்த்திவாசன் என்ற மாணவர் நீட் தேர்வு முடிவு பயத்தால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ள்ளறார். இந்த சம்பவம்  கோவையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியை சேர்ந்த விவசாயி குப்புசாமி- வளர்மதி ஆகிய தம்பதியின் மகன் கீர்த்திவாசன் (வயது 21). இவர்  கடந்த 2018 ம் ஆண்டில் பொள்ளாச்சி பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து தேர்ச்சி பெற்றார்.  மருத்துவம் படிக்க ஆசைப்பட்டு நீட் தேர்வுகளை எழுதி வருகிறார் தற்போது 3வது முறையாக கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற  நீட் தேர்வை எழுதி உள்ளார். நீட் தேர்வு முடிவை வெளியிட உச்சநீதிமன்றம் நேற்று அனுமதி வழங்கியது. இதனால் கடுமையான மனஅழுத்ததுக்கு ஆளான கீர்த்திவாசன், நீட்  தேர்வில் மீண்டும் தோல்வி அடைந்து விடுவோமா என்ற பயத்தில் மனமுடைந்து விஷம் குடித்துள்ளார்.

விஷம் குடித்துவிட்டு மயங்கி கிடந்ததை கண்ட அவரது பெற்றோர், அவரை உடனே பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு  முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால், துரதிருஷ்டவசமாக,   செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

ந்த சம்பவம் குறித்து கிணத்துக்கடவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.