கொஹிமா

நாகாலாந்து மக்களை கேவலமாகப் பேசியதற்காக திமுகவின் ஆர் எஸ் பாரதிக்கு  அம்மாநில ஆளுநர் இல கணேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி,  முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவில் பேசியபோது நாகாலாந்து மக்கள் குறித்துப் பேசிய கருத்துக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தனர்.

நாகாலாந்து ஆளுநர் இல கணேசனும் ஆர்.எஸ்.பாரதியின் பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

”திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியின் பேச்சு நாட்டின் கலாச்சாரத்தைச் சிதைக்கும் வகையில் அமைந்துள்ளது. நாகாலாந்து மக்களை அவர்கள், உணவுப் பழக்கத்தை வைத்துக் கொச்சைப்படுத்தக்கூடாது.

ஒட்டுமொத்த நாகா மக்களையும் நாய்கறி சாப்பிடுபவர்கள் போலச் சித்தரிப்பதா? நாகா மக்களுக்கும், தமிழர்களுக்கும் இடையிலான இணக்கத்தைக் கெடுக்கும் வகையில் செயல்படக்கூடாது”

என்று தெரிவித்துள்ளார்.