டில்லி

கொலிஜியம் வழங்கிய பரிந்துரைகள் மீது மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனம், பணியிட மாற்றங்களை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான நீதிபதிகள் அடங்கிய கொலீஜியம் குழு பரிந்துரைத்து வருகிறது. கொலீஜியம் பரிந்துரையின் மீது மத்திய அரசு முடிவெடுத்து நியமனம், பணியிட மாற்ற உத்தரவுகளைப் பிறப்பிப்பது வழக்கம்.

ஒரு சில நேரங்களில் கொலீஜியம் பரிந்துரைகளை மத்திய அரசு முழுமையாக ஏற்றுக்கொள்வது இல்லை. ஒரு சில நீதிபதிகள் நியமனத்தை ஏற்காமல் திருப்பி அனுப்பி வைக்கிறது., அவ்வப்போது மத்திய அரசுக்கும் கொலீஜியத்திற்கும் இடையே இதனால் கருத்து மோதல் நிலவுகிறது.

இன்று உச்சநீதிமன்றத்தில் கொலீஜியம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது.

நீதிபதிகள்

“கொலீஜியத்தின் பரிந்துரைகளில் சிலரை மட்டும் தேர்வு செய்து நீதிபதிகளாக மத்திய அரசு நியமித்து வருகிறது. மத்திய அரசின் இத்தகைய போக்கால் நீதித்துறையில் ஒழுங்கின்மை ஏற்படும்.  மத்திய அரசின் இப்போக்கு ஏற்புடையது அல்ல. எனவே மத்திய அரசிடம் நிலுவையில் உள்ள கொலீஜியத்தின் பரிந்துரைகளை உடனே பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும்” 

என்று அறிவுறுத்தினர்.