தமிழில் முன்னணி இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா மெக்கா மற்றும் மதினா புனித பயணமான உம்ரா சென்றுள்ளதாக இணையத்தில் வைரலாகி உள்ளது.

2014 ம் ஆண்டு இஸ்லாமிய மதம் மாறிய இளையராஜாவின் இசைவாரிசான யுவன் சங்கர் ராஜா தனது பெயரை அப்துல் ஹாலிக் என்று மாற்றிக்கொண்டார்.

ஆடை வடிவமைப்பாளரான நிஷா என்பவரை 2015 ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு ஸியா என்று மகள் உள்ளார்.

இசைத்துறையில் பரபரப்பாக இயங்கி வரும் யுவன் சங்கர் ராஜா தற்போது சந்தானம் நடிப்பில் உருவாகி வரும் ஏஜென்ட் கண்ணாயிரம் என்ற படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த இறுதினங்களுக்கு முன் இவர் உம்ரா சென்றுள்ளதாக இணையத்தில் பரபரப்பானது.

ஏழை பணக்காரர் என்ற பாகுபாடின்றி உம்ரா செல்லும் லட்சக்கணக்கான இஸ்லாமியர்கள் உடுத்திக்கொள்ளும் பாரம்பரிய உடை அணிந்து இருக்கும் யுவனின் படம் வெளியாகி வைரலாகி வருகிறது.