விஜய் நடிப்பில் தில் ராஜூ தயாரிப்பில் வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் படம் வாரிசு.

பொங்கலன்று வெளியாக இருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு பெருமளவு முடிந்துவிட்ட நிலையில் இதன் போஸ்ட் புரொடக்சன் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ராஷ்மிகா மந்தனா பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஷாம், யோகிபாபு, பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், சங்கீதா, சம்யுக்தா உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.

இந்தப் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பாடலுக்கான ப்ரோமோ இன்று மாலை வெளியாகும் என்று இந்தப் படத்தின் தயாரிப்பு நிறுவனம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் அறிவித்துள்ளது.