பிக்பாஸ் 3 தமிழ் இறுதி போட்டி: வெற்றியாளராக முகென் அறிவிப்பு ?

Must read

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதி போட்டியில், வெற்றியாளராக முகென் ராவ் அறிவிக்கப்பட்டுள்ளார்.

தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமான பிக்பாஸ் நிகழ்ச்சியை விஜய் தொலைக்காட்சி ஒளிபரப்பி வருகிறது. முதல் 2 சீசன்களை தொகுத்து வழங்கிய நடிகர் கமல்ஹாசன், 3வது சீசனையும் தொகுத்து வழங்கி வருகிறார். மூன்றாவது சீசனில் கவின், லாஸ்லியா மரியனேசன், முகன் ராவ், சாண்டி, ஷெரின், தர்ஷன், சேரன், வனிதா விஜயகுமார், அபிராமி வெங்கடாச்சலம், மதுமிதா, சாக்ஷி அகர்வால், சரவணன், ரேஷ்மா பசுபுலேட்டி, மோகன் வைத்தியா, பாத்திமா பாபு என்று 15 போட்டியாளர்களை வைத்து தொடங்கிய இந்நிகழ்ச்சில், 16வது போட்டியாளராக மீரா மிதுன் 2வது நாள் இணைந்தார். அதன் பின்னர் வைல்ட் கார்டு என்ட்ரியாக கஸ்தூரி உள்ளே நுழைய, நிகழ்ச்சியும் சுவாரஸ்யமானது.

ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு நபர் வெளியேற்றப்பட, இறுதி போட்டியில் இருந்து கடைசியாக ஷெரின் வெளியேறினார்.

பல்வேறு கலை நிகழ்வுகளுடன் தொடங்கிய இறுதிப்போட்டியில், லாஸ்லியா வெளியேற்றப்பட, வெற்றியாளராக முகென் ராவும், 2வது வெற்றியாளராக சாண்டியும் அறிவிக்கப்பட்டனர்.

More articles

Latest article