கூவாகம்

ரசு திருநங்கைகளுக்கு இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என மிஸ் கூவாகமாக தேர்சு செய்யப்பட்ட சென்னை நிரஞ்சனா கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்று கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடைபெறுகிறது.  இதையொட்டி உல்கெங்கும் உள்ள பல நாடுகள், மாநிலங்களில் இருந்து திருநங்கைகள் வந்துள்ளனர்.   இவர்களுக்கான நடன நிகழ்ச்சிகள், மிஸ் கூவாகம் அழகிப் போட்டி நடைபெறுகிறது.

நேற்று ‘மிஸ் கூவாகம் 2023′ அழகிப் போட்டியின் இறுதிச்சுற்று நடைபெறுவதாக இருந்த நிலையில், பலத்த மழையின் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டு இன்று கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது. போட்டிக்குத் தேர்வு செய்யப்பட்ட 16 பேரில் ஒருவர் தவிர 15 பேர் அடுத்த சுற்றான இரண்டாம் சுற்றில் 7 பேர் தேர்வு செய்யப்பட்டு, நடை, உடை, பாவனை மற்றும் கேள்விக்கு அளித்த பதில்களின் அடிப்படையில், நடுவர்கள் முதல், இரண்டாம், மூன்றாமிடம் பெற்றவர்களை தேர்வு செய்து, விழாக் குழுவினரிடம் தெரிவித்தனர்.

அதன்படி 2023 ஆம் ஆண்டுக்கான மிஸ் கூவாகம் அழகியாகச் சென்னையைச் சேர்ந்த கே. நிரஞ்சனா  தேர்வு செய்யப்பட்டார். மேலும் இரண்டாமிடத்தைச் சென்னை ஜி.டிஷா, மூன்றாமிடத்தை, சேலம் இ.சாதனா  ஆகியோர் பெற்றனர். தென்னிந்திய திருநங்கைகள் கூட்டமைப்பின் தலைவர் மோகனாம்பாள், செயலர் கங்கா, விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி ஆகியோர் இவர்களுக்குக் கிரீடம் கூட்டி, பட்டம் அணிவித்து, வாழ்த்துகளை தெரிவித்தனர்.

இந்த வருட்த்துக்கானமிஸ் கூவாகமாக தேர்வு செய்யப்பட்ட சென்னை நிரஞ்சனா கூறும்போது   திருநங்கையான ‘நான் மாடலிங் துறையில் உள்ளேன்.  நாம் ஒவ்வொருவரும் தங்களின் திறமைகளை அறிந்து தங்களுக்கான வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும். நீங்கள் அனைவரும் நம்மால் முடியும் என்ற நம்பிக்கையை வைத்தால் நிச்சயம் சாதிக்கலாம்.  திருநங்கைகளுக்கு அரசு இட ஒதுக்கீடு  அளிக்க வேண்டும் ஆனால். சலுகை தேவையில்லை. ஏனெனில் எங்களுக்கு எல்லா திறமைகளும் உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.