சென்னை: பஞ்சாயத்து தலைவர்களுக்கு மாத ஊதியம் உயர்த்தப்படுவதாகவும் என்றும்,  சிறப்பாக செயல்படும் சமுதாயம் சார்ந்த அமைப்புகளுக்கு மணிமேகலை விருது வழங்கப்படும் சட்டப்பேரவையில் அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்து உள்ளார்.

தமிழக சட்டப்பேரவை பட்ஜெட்கூட்டத் தொடரில் நேற்று (23ந்தேதி) முதல்  மானிய கோரிக்கை விவாதங்கள் தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்றைய தினம் நீர்வளத்துறை தொடர்பாக விவாதங்கள் நடைபெற்றது. இன்று  நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.

ஊரக வளர்ச்சித்துறை மானியக் கோரிக்கை தொடர்பாக சட்டப்பேரவையில் பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர்  பெரிய கருப்பன்,  பஞ்சாயத்து தலைவர்களின் மாத ஊதியம் ரூ.10,00ல் இருந்து ரூ.20ஆயிரமாக உயர்த்தப்படுகிறது என்று  அறிவித்துள்ளார். இந்த ஊ திய உயர்வு மூலம் தமிழக்தில் 12,000க்கும் மேற்பட்ட ஊராட்சி தலைவர்கள் பயன்பெறுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், சுகாதாரத்தில் சிறப்பாக செயல்படும் கிராமங்களுக்கு முன் மாதிரி கிராம விருது வழங்கப்படும் என்றும்,

மாநில மற்றும் மாவட்ட அளவில் சிறப்பாக செயல்பட்டு வரும் மகளிர் சுய உதவி குழுக்கள், கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள் மற்றும் நகர்ப்புற பகுதி அளவிலான கூட்டமைப்புகளுக்கு “மணிமேகலை விருதுகள்” வழங்கப்படும், இதற்காக ய இரண்டு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என தெரிவித்தார்.