சென்னை: தமிழ்நாட்டில் அரசு பணியில் இருக்கும் பெண்களின் மகப்பேறு விடுப்பை 12 மாதங்களாக அதிகரித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் 2021-2022ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை  ஆகஸ்டு 13ந்தேதி முதன்முறையாக காகிதமில்லா இ-பட்ஜெட்டாக தமிழக சட்டப்பேரவையில்  தாக்கல் செய்யப்பட்டது.  தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றினார்.

அப்போது, “2021-22இல் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டம் ரூ.1.046.09 கோடியில் நடைமுறைப்படுத்தப்படும். மருத்துவம் மற்றும் குடும்ப நலத்துறைக்கு ரூ.18,933 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவித்திட்டத்திற்கு ரூ.959.20 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மகளிர் பேறு  கால விடுப்பு 9 மாதங்களில் இருந்து 12 மாதங்களாக உயர்த்தப்படும் என்பது உள்பட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

இந்த நிலையில், மகளிர் பேறு  கால விடுப்பு 9 மாதங்களில் இருந்து 12 மாதங்களாக உயர்த்தி தமிழகஅரசு அரசாணை வெளியிட்டு உள்ளது.

அகவிலைப்படி?, மகளிர் அரசு ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு 12 மாதமாக உயர்வு! பட்ஜெட்டில் நிதியமைச்சர் தகவல்..