சென்னை: மகளிர் அரசு ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு 12 மாதமாக உயர்த்தப்படுவதாக  பட்ஜெட்டில் நிதியமைச்சர் தகவல் தெரிவித்து உள்ளார். மேலும் அகவிலைப்படி 2022ம் ஆண்டு ஏப்ரல் முதல் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் முதல்முறையாக காகிதமில்லா இ-பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதையடுத்து, தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார். இந்நிலையில், நிதியாண்டின், எஞ்சிய 6 மாதங்களுக்கு மட்டுமே இந்த பட்ஜெட் பொருந்தும் என்று தெரிவித்துள்ளார்.

பட்ஜெட்டில் அரசு பணியாளர்கள் நலன் குறித்து தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது,

பணியில் இருக்கும் போது உயிரிழக்கும் பணியாளர்களின் குடும்பத்திற்கு வழங்கப்படும் 3 லட்சம் ரூபாய் 5 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்.

மகளிர் அரசு ஊழியர்களுக்கு 9 மாதங்களில் இருந்து 12 மாதங்களாக மகப்பேறு விடுப்பு உயர்த்தப்படுகிறது.

கொரோனா பெருந்தொற்று காலத்தில் மற்ற மாநிலங்களாஇப் போல் அல்லாமல், சரியான நேரத்திற்கு சம்பளம் வழங்கப்பட்டுள்ளது.

உயர்த்தப்பட்ட அகவிலைப்படி வரும் ஏப்ரல் முதல் அரசு பணியாளர்களுக்கு வழங்கப்படும்.