சென்னை: பெட்ரோல் மீது விதிக்கப்படும் வரியில் ரூ.3 குறைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக  பட்ஜெட்டில் நிதியமைச்சர் தெரிவித்து உள்ளார்.

தமிழகத்தில் முதல்முறையாக காகிதமில்லா இ-பட்ஜெட்ரைமட நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். இந்த பட்ஜெட்டின் தற்போதைய  நிதியாண்டின், எஞ்சிய 6 மாதங்களுக்கு மட்டுமே  பொருந்தும் என்று தெரிவித்துள்ளார். தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளை முன்னுரிமை அளித்து படிப்படியாக நிறைவேற்றுவோம் என்று அவர் தெரிவித்துள்ள நிலையில், ஒரே ஆண்டில் செய்து முடிக்க இயலாத அளவுக்கு பணி மிக கடுமையாக உள்ளது. எனவே, நிதிநிலை சிக்கலை செய்து முடிக்க 2,3 ஆண்டுகள் வரை முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார்.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தகவலாக, திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டபடி,  பட்ஜெட் உரையில், ஏழை நடுத்தர மக்களின் வலியை உணர்ந்து பெட்ரோல் மீது விதிக்கப்படும் வரியில் ரூ. 3 குறைக்க முதல்வர் ஆணையிட்டுள்ளார் என தெரிவித்தார்.

பெட்ரோல் மீதான வரி குறைப்பால் ஆண்டுக்கு ரூ.1,160 கோடி வருவாய் இழப்பு ஏற்படும். பெட்ரோல் வரி குறைப்பு உழைக்கும் நடுத்தர குடும்பங்களுக்கு நிவாரணமாக அமையும் என தெரிவித்தார்.

திமுக தனது அறிக்கையில் பெட்ரோல் விலையில் ரூ.5  குறைப்பதாக உறுதியளித்த நிலையில் பட்ஜெட்டில் ரூ.3 குறைப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.