டில்லி:

ந்திய பிரதமர்  மோடி விரும்பினால் காஷ்மீர் பிரச்சனையில் தலையிட தயார் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும்  கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே கடந்த மாதம்  பாகிஸ்தான் அதிபர் இம்ரான்கான்  அமெரிக்கா சென்றிருந்தபோது, அங்கு வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டிரம்பை சந்தித்து பேசினார். அதன்பிறகு பேசிய டிரம்ப், ‘இரண்டு வாரங்களுக்கு முன்னர் என்னைச் சந்தித்த மோடி, காஷ்மீர் விவகாரத்தில் சமரசம் செய்யுமாறு கேட்டுக்கொண்டார்’ என்று தெரிவித்தார்.

டிரம்பின் இந்த தகவல், சர்வதேச அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுகுறித்து பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் அமளி துமளி ஏற்பட்டது. அதையடுத்து, இதற்கு விளக்க்ம் அளித்த, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ‘காஷ்மீர் விவகாரத்தில் சமரசம் பேசுவதற்கு மோடி டிரம்பிடம் எதும் கோரிக்கை வைக்கவில்லை’ என்று தெரிவித்தார். ஆனால், அதை எதிர்க்கட்சிகள் ஏற்க மறுத்தது.

டிரம்பின் கருத்துக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மறுத்த நிலையில், அமெரிக்க செனட் உறுப்பினரும் அதற்கான மன்னிப்பு கோரியிருந்தார்.

இந்த நிலையில், முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியும், காஷ்மீர் விவகாரத்தில்  இந்தியாவின் எண்ணத்துக்கு மோடி துரோகம் செய்துவிட்டார்.. என்று கடுமையாக  சாடியிருந்தார்.

இந்த நிலையில், வாஷிங்டன்னில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமெரிக்க அதிபரிடம், காஷ்மீர் பிரச்சினை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது, காஷ்மீர் பிரச்சினையில்  மத்தியஸ்தம் செய்யும் முடிவை இந்தியா ஏற்க மறுத்தது குறித்து கேட்டனர். அதற்கு பதிலளித்த டிரம்ப், காஷ்மீர் பிரச்சினையில் மத்தியஸ்தத்தை ஏற்றுக்கொள்வது என்பது இந்திய பிரதமர் மோடியிடம் தான் உள்ளது.

காஷ்மீர் பிரச்சினையில் நான் தலையிட வேண்டும் என்று இருநாடுகளும் விரும்பினால் உதவ தயாராக இருக்கிறேன். காஷ்மீர் பிரச்சனை இந்தியா- பாகிஸ்தான் இடையே நீண்ட காலமாக நிலவி வருகிறது.

இவ்வாறு தெரிவித்து உள்ளார்.