சென்னை

எஸ் டி பி ஐ கட்சியை கூட்டணியில் இணைத்துக் கொண்ட மக்கள் நீதி மய்யம் அக்கட்சிக்கு 18 தொகுதிகள் ஒதுக்கி உள்ளது.

 

ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற உள்ள தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணிகள் களத்தில் உள்ளன.  இவற்றுடன் மக்கள் நீதி மய்யம் கட்சியும் மூன்றாவது அணியாகக் களம் இறங்குகிறது.   இந்த கூட்டணியில் ஏற்கனவே சமத்துவ மக்கள் கட்சி மற்றும், ஐஜேகேவுக்கு தலா 40 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

மதவாத பாஜக அரசைத் தேர்தலில் எதிர்கொள்ள ஒரு இஸ்லாமியக் கட்சியை தங்கள் கூட்டணியில் இணைக்க மக்கள் நீதி மய்யம் முடிவு செய்தது.   அதன்படி நேற்று எஸ் டி பி ஐ கட்சியுடன் பேச்சு வார்த்தை நடந்தது.  அந்த பேச்சு வார்த்தை இன்றும் தொடர்ந்தது.

பேச்சு வார்த்தையின் முடிவில் எஸ் டி பி ஐ கட்சிக்கு 18 தொகுதிகளை ஒதுக்கீடு செய்ய மக்கள் நீதி மய்யம் ஒப்புக் கொண்டது.  இதையொட்டி எஸ் டி பி ஐ கட்சியின் தேசிய துணைத் தலைவர் தெற்லான் பாகவியும் மாநிலத் தலைவர் செல்லை முபாரக்கும் கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளனர்.