சென்னை: மிலாடி நபி  மற்றும் காந்தி ஜெயந்தி ஆகிய 3 நாட்கள் தமிழகத்தில்  டாஸ்மாக் கடைகளை மூட  தமிழ்நாடு அரசு உத்தர விட்டு உள்ளது.

தமிழ்நாடு அரசுக்கு வருமானம் உள்ள துறையாக டாஸ்டாக் செயல்பட்டு வருவதால்,  மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கான டாஸ்மாக் கடைகளை திறந்து, மக்களை குடிகாரர்களாக்கி கல்லா கட்டி வருகிறது தமிழ்நாடு அரசு. இடையிடையே டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக பெண்கள் போராட்டம் நடத்தினாலும் அதை கண்டுகொள்ளாமல் கடைகள் திறக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில், திருப்பத்தூர்  பகுதியில் புதிய டாஸ்மாக் கடை திறக்க அரசு முன்வந்துள்ள நிலையில், அதை எதிர்த்து பொதுமக்கள் கடந்த ஒரு வாரமாக போராடி வருகின்றனர்.

இந்த நிலையில், செப்டம்பர் 28 மற்றும் அக்டோபர் 2ம் ஆகிய 2 நாட்களிலும் அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட அரசு உத்தர விட்டுள்ளது.

செப்டம்பர் 28அன்று இஸ்லாமியர்களின் பண்டிகையான மிலாடி நபி கொண்டாடப்படுவதாலும், அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி கொண்டாடப்பட இருப்பதாலும், அந்த 2 நாட்களும்  டாஸ்மாக் கடைகளுக்கு அரசு பொதுவிடுமுறை அறிவித்துள்ளது.

இதையடுத்து, தமிழகத்தில் அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மேற்கண்ட 2நாட்களில் மூட வேண்டும் என்று அரசு உத்தரவிட்டு c உள்ளது. இந்த உத்தரவை மீறி, யாராவது மதுபானம் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக அரசு எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.