சென்னை:
100 நாள் வேளை திட்டத்தில் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு, அவர்களுக்கான  ஊதியம் வீடுகளுக்கே சென்று வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து உள்ளார்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டத்தின்படி ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் 2005ம் ஆண்டு முதல் ஆண்டுக்கு 100நாள் வேலைவாய்ப்பு திட்டம் மத்தியஅரசால் அமல்படுத்தப்பட்டு, பணியாளர்களுக்கு குறைந்த பட்ச ஊதியம் வங்கிகள் மூலம்  வழங்கப்பட்டு வருகிறது.
தற்போது கொரோனாவல் 100நாள் வேலைவாய்ப்பு பணிகளும் முடங்கியதால், தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது தளர்வுகள் காரணமாக அவர்கள் மீண்டும் பணிக்கு சென்றுள்ளனர். ஆனால் அவர்கள் ஊதியம் பெறுவதில் சிக்கல் நீடித்து வருகிறது.
இந்த நிலையில்,  100 வேலைத்திட்டத்தில் பணியாற்றுபவர்களின் ஊதியத்தை அவரவர் வீடுகளுக்கே சென்று அளிக்க முதலமைச்சர் உத்தரவிட்டு உள்ளார்.
இதுவரை பணியாட்களின் ஊதியம் வங்கிகணக்கில் செலுத்தப்பட்டு வந்த நிலையில் 3 மாதத்திற்கு நேரடியாக பணியாட்களின்  வீடுகளுக்கு சென்று அளிக்க முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார் .  3 மாதங்களுக்கு இந்த நடைமுறை தொடரும் என்றும் கூறி உள்ளார்.
100 நாள் வேலை உறுதி திட்ட பணியாளர்களுக்கான தினக்கூலி 229 ரூபாயில் இருந்து 256 ஆக உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.