Skip to content
  • Thu. Sep 24th, 2026

www.patrikai.com

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
தமிழ் நாடு

சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், விவசாயிகளுக்கு கூடுதல் கடன் வழங்க வேண்டும்… வங்கிஅதிகாரிகள் கூட்டத்தில் எடப்பாடி பேச்சு

May 30, 2020

சென்னை:

சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், விவசாயிகளுக்கு கூடுதல் கடன் வழங்க வேண்டும் என்றும், பொருளாதாரத்தை மீட்டெடுக்க வங்கிகளின் ஒத்துழைப்பு அவசியம்  வங்கிஅதிகாரிகள் கூட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வேண்டுகோள் விடுத்தார்.

சென்னை தலைமை செயலகத்தில் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சிறு, குறு நிறுவனங்கள், விவசாயிகளுக்கு  கடன் வழங்குவது தொடர்பாக வங்கி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.  இந்த ஆலோசனை கூட்டத்தில்  துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம், துறை அமைச்சர்கள், தலைமை செயலாளர் மற்றும் பல்வேறு வங்கிகளின் அதிகாரிகள் பங்கேற்றனர்.
இதில், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள தொழில்நிறுவனங்கள் மற்றும்  பொருளாதாரத்தை மேம்படுத்துவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. அப்போது வங்கி அதிகாரிகளுடன் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி,
கொரோனாவிலிருந்து குணமடைவோர் தமிழகத்தில் தான் அதிகம் என்று தெரிவித்தவர், கொரோனாவால் சரிவடைந்துள்ள பொருளாதாரத்தை மீட்டெடுக்க வங்கிகளின் ஒத்துழைப்பும் அவசியம் என்றார்.
தமிழகத்தில் ஊரடங்கால் நலிவடைந்துள்ள சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் மீண்டும் பழைய நிலைமைக்கு வர வங்கிகள்  கூடுதல் கடன் வழங்க வேண்டும் என்று வலியுறுத்திய முதல்வர்,  விவசாயிகளுக்கான கடனுதவியை உடனடியாக  வழங்க வேண்டும் என்றும்,  விவசாயிகளுக்கு சிறப்பு முகாம்கள் மூலம் உழவர் கடன் அட்டையை வங்கிகள் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மேலும்,  ஊரக தொழில்களை மேம்படுத்தவும், புதிய தொழில் தொடங்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் வழங்கி வங்கிகள் உதவ வேண்டும்.
இவ்வாறு எடப்பாடி  பேசினார்.

Post navigation

தமிழகத்தில் வெட்டுக்கிளிகள் படையெடுப்பு: ககன்தீப் சிங் பேடி தலைமையில் ஆலோசனை
வீடு தேடி வருகிறது 100 நாள் வேலைத்திட்டத்தின் ஊதியம்…

Related Post

தமிழ் நாடு

வீட்டுக்கூரை சூரியசக்தி திட்டத்திற்கு தமிழக அரசு மானியம்… சோலார் பேனல் அமைக்க ரூ.1 லட்சம் வரை மானியம்!

தமிழ் நாடு

தமிழகத்தில் புதிதாக 7 அரசு செவிலியர் கல்லூரிகள்! இந்த ஆண்டு முதலே மாணவர் சேர்க்கை…

தமிழ் நாடு

₹2,109 கோடி பாக்கி… தூய்மைப் பணியாளர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல் திணறும் ஒப்பந்ததாரர்கள்!

உலகம்

உலகம்

மெக்காவை குறிவைத்து ஹவுத்திகள் தாக்குதல்… சவூதி அரேபியா அறிவிப்பால் உலகளவில் கொந்தளிப்பு… ‘வடிகட்டிய பழைய பொய்’ என ஹவுத்திகள் மறுப்பு

September 16, 2026 Sundar
உலகம் மருத்துவம்

ஆணுறுப்பை பெரிதாக்க சிகிச்சை: தாய்லாந்தில் இங்கிலாந்தைச் சேர்ந்தவர் உயிரிழப்பு

September 9, 2026 Sundar
இந்தியா உலகம்

அருணாச்சலப் பிரதேசம், அக்சாய் சின் : ஐ.நா. வெளியிட்டுள்ள புதிய உலக வரைபடத்தில் இந்திய – சீன எல்லைப் பகுதிக்கு இடைப்பட்ட பகுதியாக சித்தரிப்பு…

September 7, 2026 Sundar
உலகம்

11ம் நாள் காரியத்திற்கு தயாரான நேபாள குடும்பத்திற்கு மூதாட்டி உயிருடன் மீட்பட்டதால் ஆனந்த அதிர்ச்சி…

September 7, 2026 Sundar
உலகம் சிறப்பு கட்டுரைகள்

உலக வரைபடமே மாறுகிறது!

September 5, 2026 Sundar

www.patrikai.com

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer