சென்னை: தமிழகத்தில் செப்டம்பர் முடியும் வரை கல்வி நிலையங்கள் திறக்க வேண்டாம், கடும் கட்டுப்பாடுகளுடன் போக்குவரத்தை தொடங்கலாம் என்று முதலமைச்சரிடம் சிறப்பு மருத்துவக்குழு பரிந்துரைத்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் இன்னமும் ஓயவில்லை. நாள் தோறும் பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனா தாக்குதலை குறைக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு வரும் 31ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது.

அதன் பிறகு இந்த ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்பது குறித்து பலவாறாக தகவல்கள் வெளியாகின. இந் நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

அதன்பிறகு மருத்துவக்குழுவினருடன் சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனைக் கூட்டம் தற்போது நிறைவு பெற்றுவிட்டது. கூட்டத்தில் பல முக்கிய பரிந்துரைகளை மருத்துவக்குழு முதலமைச்சர் அளித்துள்ளது.

குறிப்பாக, தமிழகத்தில் செப்டம்பர் முடியும் வரை கல்வி நிலையங்கள் திறக்க வேண்டாம், கடும் கட்டுப்பாடுகளுடன் போக்குவரத்தை தொடங்கலாம் என்று முதலமைச்சரிடம் சிறப்பு மருத்துவக்குழு பரிந்துரைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.