சென்னை: தமிழகத்தில் வெப்பநிலை இயல்பை விட 3 – 4 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும்  என சென்னை  வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த இரு வாரங்களாக வழக்கத்துக்கு மாறாக வெப்பம் அதிகரித்து காணப்படுகிறது. அத்துடன் அனல் காற்றும் வீசுவதால், பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரவே தயங்குகின்றனர். இதற்கிடையில், இன்னும் 4 நாளில் அக்னி நட்சத்திரம் வெயில் தொடங்க உள்ளதால், வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்த நிலையில்,  தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்கும்’ என தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 3 – 4 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்  என்று எச்சரிக்கை விடுத்துள்ளத.

தமிழ்நாட்டில் நாளை (மே 1ந்தேதி)  முதல் 03ம் தேதி வரை வட தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 3 – 5 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதற்கிடையில், தென் தமிழகம், அதையொட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்றும், நாளையும் கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும்,  இன்று முதல் மே 3-ம் தேதி வரை மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.