கொல்கத்தா: திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 2 சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் 50 கவுன்சிலர்கள் பாரதீய ஜனதா கட்சியில் சேர்ந்ததையடுத்து, அமைச்சரவையில் சில மாற்றங்களை செய்துள்ளார் அக்கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி.

சமீபத்திய மக்களவைத் தேர்தலில், மேற்குவங்கத்தில் யாரும் எதிர்பாராத வகையில் பாரதீய ஜனதா 18 இடங்களில் வென்றதையடுத்து, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் சலசலப்பு ஏற்பட்டது.

இதையடுத்து, அக்கட்சியின் 2 சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் 50 கவுன்சிலர்கள் அக்கட்சியிலிருந்து விலகி, பாரதீய ஜனதாவில் இணைந்தது அக்கட்சி வட்டாரத்தில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இன்னும் பலர் விலகி தம் கட்சியில் இணைவர் என்றும் கூறிவருகின்றனர் பாரதீய ஜனதாவினர்.

எனவே, நிலைமையை சமாளிக்கும் வகையில், தனது அமைச்சரவையில் சில மாற்றங்களை செய்துள்ளார் மம்தா பானர்ஜி. வடக்கு வங்காளம் மற்றும் ஜங்கல்மஹால் போன்ற பகுதிகளில்தான் திரிணாமுல் காங்கிரசுக்கு பெரிய சரிவு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.